மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 23 ஜூலை 2021

இத்தனை கோடிக்கு விற்பனையா? நெற்றிக்கண் பிசினஸ் விவரம்!

இத்தனை கோடிக்கு விற்பனையா? நெற்றிக்கண் பிசினஸ் விவரம்!

பெரிய ஹீரோக்களின் படத்தில் நாயகியாக நடிப்பது மட்டுமின்றி, சோலோ லீடாகவும் நடித்து அசத்தி வருகிறார் நயன்தாரா. தமிழ் சினிமா நடிகைகளில் அதிக சம்பளம் பெறும் நடிகையும் இவர்தான்.

நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் அடுத்த படம் ‘நெற்றிக்கண்’. இந்தப் படத்தை நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் தயாரித்திருக்கிறார். சித்தார்த் நடித்த அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். க்ரைம் த்ரில்லராக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. படத்தில் பார்வை சவால் கொண்ட கேரக்டரில் நயன்தாரா நடித்திருக்கிறார். திரையரங்க ரிலீஸுக்காகத் திட்டமிட்ட இந்தப் படம், டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

ஏற்கெனவே, அம்மனாக நயன்தாரா நடித்து வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி செம ஹிட். பொதுவாக, ஒரு படம் வெளியாகி பெறும் வசூலை அடிப்படையாகக் கொண்டு அடுத்த படத்தின் வியாபாரம் இருக்கும். அப்படி, ஓடிடியில் வெளியான முந்தைய படத்தின் வெற்றியே, அடுத்த படத்தின் வியாபாரத்தை நிர்ணயிக்கிறது.

முந்தைய படங்கள் பெற்ற வரவேற்பினால், நெற்றிக்கண் படத்துக்குப் பெரும் விலையைச் சொல்லியிருக்கிறது தயாரிப்புத் தரப்பு. அந்த விலையும் கிடைத்திருப்பதாகத் தெரிகிறது. நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தை வாங்க ஹாட் ஸ்டார் மற்றும் பிரைம் நிறுவனங்கள் போட்டிப் போட்டு வந்த நிலையில், டிஸ்னி ஹாட் ஸ்டார் இந்தப் படத்தைக் கைப்பற்றியுள்ளது.

அதோடு, சுமார் 22 கோடிக்கு விற்பனையாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதோடு, தமிழ்ப் படங்களுக்கு இந்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனால், இந்தி உரிமை மட்டும் 2 கோடிக்கு விற்பனையாகியிருக்கிறதாம். அதனால், நெற்றிக்கண் படத்துக்கு இதுவரை 24 கோடி வரை பிசினஸ் ஆகியிருக்கிறது. இந்தப் படத்துக்கு அதிகப்பட்சமாக 12 கோடி வரை செலவு ஆகியிருக்கும் என்கிறார்கள். அப்படிப் பார்க்கையில், இரட்டிப்பு லாபத்தைத் தந்திருக்கிறது நெற்றிக்கண். புதிதாக தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி பெரும் விலையை லாபமாகப் பெறுவதெல்லாம் அத்தனை சுலபமல்ல. ஈஸியாக அதை வென்று காட்டியிருக்கிறார் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன்.

தற்போது, ரஜினியுடன் ‘அண்ணாத்த’ மற்றும் விஜய் சேதுபதியுடன் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படங்கள் நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து உருவாகிவரும் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- தீரன்

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

3 நிமிட வாசிப்பு

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

வெள்ளி 23 ஜூலை 2021