மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 21 ஜூலை 2021

நடிகர் விதார்த்தைத் தேர்வு செய்தது ஏன்?

நடிகர் விதார்த்தைத் தேர்வு செய்தது ஏன்?

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் டி.விஜய ராகவேந்திரா, ‘கொரில்லா, மசாலா படம்’ மற்றும் அருண் விஜய் நடித்து விரைவில் வெளியாகவுள்ள ‘பார்டர்’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார்.

தற்போது விதார்த், கருணாகரன் மற்றும் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி. சரித்திரன், பிரேம், சௌமியா, கவிதாலயா கிருஷ்ணன், மூணார் ரமேஷ் மற்றும் பலர் நடிப்பில் தனது அடுத்த ஆறாவது தயாரிப்பாகப் புதிய படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தை ‘உறுமீன்’ படத்தை இயக்கிய சக்திவேல் பெருமாள்சாமி இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமாகியது.

இயக்குநர் சக்திவேல் பெருமாள்சாமி இந்தப் படம் பற்றி கூறியதாவது, “ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நம் சிந்தனையைத் தூண்டும் வகையில் உருவாகும் படைப்பு இது. தற்காலத்திய பிரச்சினைகளைச் சுற்றி நடக்கும் கதையென்பதால் ரசிகர்கள் எளிதாக உணரும் வகையில் தங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில் இருக்கும்.

இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதி முடித்தபோது, மக்களைக் கவரும் ஒரு பிரபல நடிகர் இக்கதைக்கு தேவைப்பட்டார். கமர்ஷியல் சினிமாவையும் கருத்து மிகுந்த படங்களையும் இணைக்க ஒரு பாலமாக இருக்கும் நடிகரும் தேவைப்பட்டார். அந்த வகையில் பார்க்கும்போது, முதலில் மனதுக்கு வந்தவர் நடிகர் விதார்த் மட்டும்தான். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய இடத்தை நிச்சயமாகப் பெற்றுத் தரும்.

லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி நடிப்பை பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தான் ஏற்கும் பாத்திரங்களில், எந்த ஒரு பெரிய மெனக்கெடல் இல்லாமல் வலிமையான காட்சிகளில்கூட, மிகவும் சுலபமாக நடிக்கக் கூடிய நடிகை. இந்தப் படம் அவருடைய திரை வாழ்க்கையில் சிறந்த படமாக அமையும்.

கருணாகரன் நகைச்சுவை கதாபாத்திரம் மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிப்பை, உள்வாங்கி சிறப்பாக நடிக்கும் ஒரு நடிகர். அவரது நடிப்புத் திறனை வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து நிரூபித்துள்ளார். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் திரைக்கதைக்குப் பெரிய அளவில் வலு சேர்க்கும் வண்ணம் மிக ஆழமாக அமைந்துள்ளது.

"டெடி மற்றும் 90 எம்எல்" படங்களில் நடித்துள்ள நடிகை மசூம் ஷங்கர், இந்தப் படத்தில் ஒரு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் சரித்திரன் தமிழகத்தின் பெரும்பான்மை வீடுகளில் ஒரு நகைச்சுவை நட்சத்திரமாக கொண்டாடப்படுபவர். ரேடியோ, தொலைக்காட்சி மற்றும் இணைய தளம் வழியாக மக்களை மகிழ்வித்து வருபவர். அவர் இந்தப் படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. விஜய ராகவேந்திரா கூறுகையில், “எங்களது தயாரிப்பில் அருண் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘பார்டர்’ திரைப்படம், விரைவில் உலகளவில் தியேட்டர் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. இந்தக் காலகட்டத்தில், அடுத்து இந்தப் புதிய படத்தின் கதையைக் கேட்டபோது, எனக்கும் மிகப்பெரிய உற்சாகத்தை தந்தது. உடனடியாக இதை தயாரிப்பதென்று முடிவெடுத்துவிட்டேன், அது மட்டுமல்லாது எனது நண்பர் சக்திவேல். அவருக்காகவும், இதைத் தயாரிக்க வேண்டும் என உறுதியாய் இருந்தேன். எங்கள் நிறுவனத்துக்கு இது, பிரத்யேகமான ஒரு படம். குறுகிய காலத்துக்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும். படத்தை 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தியேட்டரில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

-இராமானுஜம்

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

4 நிமிட வாசிப்பு

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

2 நிமிட வாசிப்பு

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

3 நிமிட வாசிப்பு

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

புதன் 21 ஜூலை 2021