மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 21 ஜூலை 2021

தனுஷ் படத்தில் ஒப்பந்தமாகும் விஜய் பட நாயகிகள்!

தனுஷ் படத்தில்  ஒப்பந்தமாகும் விஜய் பட நாயகிகள்!

தனுஷ் கைவசம் எக்கச்சக்கப் படங்கள் இருக்கிறது. ஹாலிவுட் படமான க்ரே மேன் ஷூட்டிங்கை முடித்தவர், தற்பொழுது கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடித்துவருகிறார்.

தனுஷின் 43வது படமாக உருவாகிவரும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. இப்படத்தில் தனுஷூக்கு நாயகியாக மாளவிகா மோகனன் நடித்துவருகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய்க்கு நாயகியாக நடித்தவர் மாளவிகா. மாஸ்டர் முடிந்த கையோடு, தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘தனுஷ் 43’ படத்துக்கு ஒப்பந்தமானார்.

தற்பொழுது, விஜய் படத்தில் நடித்துவரும் இன்னொரு நடிகையும் தனுஷ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

சமீபத்தில் தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்பந்தமானார் தனுஷ். தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் படம் தமிழ் - தெலுங்கு என பைலிங்குவலில் உருவாக இருக்கிறது.

இந்தப் படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல். தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. குறிப்பாக, அல்லு அர்ஜூனுடன் நடித்த ‘அல வைகுண்டபுரமுலோ’ படத்தில் புட்ட பொம்மா பாடல் இவருக்கு பெரிய ஹிட் கொடுத்தது.

தற்பொழுது, நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ’பீஸ்ட்’ படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துவருகிறார். மாளவிகா மோகனனைத் தொடர்ந்து, பூஜா ஹெக்டேவும் தனுஷூக்கு ஜோடியாகிறார்.

தனுஷின் 44வது படமான மித்ரன் ஜவகர் இயக்கும் படம் விரைவில் துவங்க இருக்கிறது. இந்தப் படம் குறுகிய காலக்கட்டத்துக்குள் முடிக்க திட்டமாம். இந்தப் படம் முடிந்த கையோடு, தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு துவங்கலாம் என்று சொல்லப்படுகிறது.

- ஆதினி

மகேஷ் பாபுக்கு பதிலளித்த ஏ.ஆர். ரஹ்மான்

2 நிமிட வாசிப்பு

மகேஷ் பாபுக்கு பதிலளித்த ஏ.ஆர். ரஹ்மான்

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

4 நிமிட வாசிப்பு

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

திரைக்கு வரும் ஆன்டி இண்டியன்!

9 நிமிட வாசிப்பு

திரைக்கு வரும் ஆன்டி இண்டியன்!

புதன் 21 ஜூலை 2021