மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 21 ஜூலை 2021

அஜித் 61 துவங்குவது எப்போது ?

அஜித் 61 துவங்குவது எப்போது ?

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் வலிமை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்நிலையில், அஜித்தின் அடுத்தப் படம் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என்று ஹிட் படங்களைக் கொடுத்து நம்பிக்கைக்குரிய இளம் இயக்குநரானவர் ஹெச்.வினோத். பின்னர், அஜித் நடிக்க ‘நேர்கொண்டப் பார்வை’ எனும் படத்தை இயக்கினார். அமிதாப் பச்சன் நடித்து வெளியான பிங்க் படத்தின் ரீமேக்.

இந்தப் படத்தின் இமாலய ஹிட்டுக்குப் பிறகு, மீண்டும் ஒரு வாய்ப்புக் கொடுத்தார் அஜித். அப்படி, அஜித்தின் 60வது படமாக ‘வலிமை’ உருவாகிறது. போனிகபூர் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் படத்துக்கான 95% பணிகள் முடிந்துவிட்டது. இன்னும், வெளிநாடு ஷூட்டிங்கும், அதற்கான எடிட்டிங் பணிகள் மட்டுமே மீதமிருக்கிறது. அதையும் முடிக்க, விரைவில் படக்குழு ஐரோப்பா செல்ல இருக்கிறது.

இந்நிலையில், அஜித்தின் 61வது படத்தையும் ஹெச்.வினோத் இயக்க இருக்கிறார். இயக்குநர் சிவாவுக்கு வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் படங்களைக் கொடுத்தது போல, ஹெச்.வினோத்துக்கும் மூன்றாவது வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார் அஜித்.

புது அப்டேட் என்னவென்றால், அஜித்தின் 61வது படம் விரைவில் துவங்க இருக்கிறது. அதுவும் அக்டோபரில் படப்பிடிப்பு துவங்க இருக்கும், இந்தப் படத்தையும் போனிகபூர் தான் தயாரிக்க இருக்கிறார். அதற்கு காரணமும் இருக்கிறது.

வலிமை படம் சென்ற வருடமே வெளியாகியிருக்க வேண்டியது. படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனதால் படத்துக்கான பட்ஜெட்டும் அதிகமாகியிருக்கிறது. நினைத்த பட்ஜெட்டைவிட அதிக பட்ஜெட்டில் படமும் உருவாகிவருகிறது. அதோடு, நினைத்த வசூலை விட சில கோடிகள் குறையவும் வாய்ப்பிருப்பதாகக் கூறுகிறார்கள். அதனால், போனிகபூருக்கு மீண்டும் ஒரு படத்துக்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார் அஜித்.

அப்படித்தான், ஹெச்.வினோத், போனிகபூர் மற்றும் யுவன் கூட்டணியில் அஜித் மீண்டும் கைகோர்த்திருக்கிறார். வலிமை படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானதும், அடுத்தப் படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

- ஆதினி

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

3 நிமிட வாசிப்பு

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

2 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

புதன் 21 ஜூலை 2021