மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஜூலை 2021

ஆர்யா லட்சியம், ஆதி நிச்சயம்: லிங்குசாமி போட்ட கணக்கு!

ஆர்யா லட்சியம், ஆதி நிச்சயம்: லிங்குசாமி போட்ட கணக்கு!

நீண்ட நாளாக தமிழில் எந்தப் படமும் இயக்காமல் இருந்த இயக்குநர் லிங்குசாமி, தெலுங்கில் படம் இயக்கி வருகிறார். தெலுங்கு நடிகர் ராம் பெத்தனேனி நடிக்க லிங்குசாமி இயக்கும் படம் கடந்த ஜூலை 12 முதல் படப்பிடிப்புத் தொடங்கி படுஜோராக நடந்து வருகிறது.

இந்தப் படத்தில் ராம் பெத்தனேனிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்ட நிலையிலும், படத்தின் வில்லனை படக்குழு அறிவிக்கவில்லை. அதற்கு காரணம் இருக்கிறது. வில்லன் யாரென்பதே இறுதிவரை உறுதியாகவில்லை என்பதே உண்மை.

இந்தப் படத்தில் வில்லன் ரோலும் மிக முக்கியமான ரோலாம். அதாவது, ஹீரோவுக்கு இணையான ரோல் என்கிறார்கள். அதற்கு பெஸ்ட் நடிகரைத் தேடிவந்தார் லிங்கு. அப்படி, மாதவன் மற்றும் அருண் விஜய்யிடமெல்லாம் பேசினார். எதுவும் சரிபட்டு வரவில்லை. இறுதியாக, ஆர்யாவை நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் படம் உருவாகிறது. ஆர்யாவுக்கு டெடி, சார்பட்டா பரம்பரை என சமீபத்தில் நல்ல வரவேற்பு நிலவுகிறது.

அப்படியிருக்கையில், ஆர்யா நடித்திருந்தால் படத்தின் நிறம் மாறியிருக்கும். ஆனால், ஆர்யா பிடிகொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இறுதியாக, ஆதியை லாக் செய்திருக்கிறார் லிங்குசாமி.

லிங்குசாமி படத்தில் ஆர்யா நடிப்பதற்கும் ஆதி நடிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. ஆர்யா நடித்திருந்தால் படத்தின் வியாபாரத்தில் பெரிய ஷேக் இருந்திருக்கும். அதை மிஸ் செய்கிறார் லிங்குசாமி.

இருப்பினும் தமிழ், தெலுங்கில் தொடர்ச்சியாகப் படங்களை நடித்துவருகிறார் ஆதி. பெரிய ஹிட் இல்லையென்றாலும் முகம் தெரிந்த நடிகர் ஆதி. அதோடு, அல்லு அர்ஜுன் நடித்த

'சர்ரைநோடு' படத்தில் வில்லனாக கெத்து காட்டியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சொல்லப் போனால், இவருக்கு தெலுங்கில் வில்லனாக நடிக்கும் இரண்டாவது படமிது.

எது எப்படியோ, இறுதியாக படத்தின் கதைதான் வெற்றியை நிர்ணயம் செய்கிறது. அஞ்சான், சண்டைக்கோழி 2 மாதிரி இல்லாமல், ரியல் லிங்குசாமியின் ஹிட்டுக்காக ரசிகர்கள் ஆல்வேஸ் வெயிட்டிங்!

-ஆதினி

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

3 நிமிட வாசிப்பு

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

ஐபிஎல் 2021: நான்காவது முறையாகக் கோப்பையை வென்ற சென்னை அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல் 2021: நான்காவது முறையாகக் கோப்பையை வென்ற சென்னை அணி!

அண்ணாத்த டீசர் முழுவதும் ரஜினி

5 நிமிட வாசிப்பு

அண்ணாத்த டீசர் முழுவதும் ரஜினி

செவ்வாய் 20 ஜூலை 2021