மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஜூலை 2021

புதுச்சேரி ஷூட்டிங்கில் நடக்கப் போவதென்ன?

புதுச்சேரி ஷூட்டிங்கில் நடக்கப் போவதென்ன?

மணிரத்னத்தின் கனவுத் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் எழுத்தாளர் கல்கியின் நாவலை மையமாகக்கொண்டு உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன். இதில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இரண்டு பாகங்களாக உருவாகிவரும் இந்தப் படத்தை லைகா நிறுவனமும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க , ரவிவர்மா ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படத்துக்கு வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு 75 சதவிகிதம் முடிவடைந்துவிட்டது. இன்னும் குறைவான காட்சிகளே படமாக்க வேண்டியிருக்கிறது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக படப்பிடிப்பு நடத்த முடியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்குகிறது.

சரி, புதுச்சேரி ஷூட்டிங்கில் என்ன நடக்கப் போகிறது? இந்த ஷூட்டிங்கில் பெரும்பாலும் கார்த்தியின் காட்சிகள் படமாக்கப் பட இருக்கிறதாம். கார்த்திக்காகவே இந்த ஷூட் நடக்கிறதாம். தற்பொழுது, சென்னையில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் ஷூட்டிங்கில் இருக்கிறார். அப்படியே நேரடியாக புதுச்சேரி செல்கிறார் கார்த்தி.

அதோடு, பத்து நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த ஷூட்டிங்கில் ஒவ்வொரு நாளும் முக்கிய நடிகர்கள் கலந்துகொள்வார்கள் என்று சொல்லப்படுகிறது. அப்படி, படத்தில் இடம்பெறும் முக்கியமான 35 நடிகர்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஷூட்டிங்கில் கலந்துகொள்ள இருக்கிறார்களாம்.

இந்த ஷூட்டுக்குப் பிறகு, மத்தியப்பிரதேசம் அல்லது ஹைதராபாத்தில் அடுத்த கட்ட ஷூட்டிங் நடக்கும் என்று சொல்லப்படுகிறது. எது எப்படியோ, அடுத்த வருட கோடை விடுமுறைக்கு பொன்னியின் செல்வன் ரிலீஸாகும் என்பது மட்டும் உறுதி.

-தீரன்

புதிய ஐபிஎல் அணிகள்: சர்ச்சைப் பின்னணி!

7 நிமிட வாசிப்பு

புதிய ஐபிஎல் அணிகள்:  சர்ச்சைப் பின்னணி!

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

3 நிமிட வாசிப்பு

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்! ...

3 நிமிட வாசிப்பு

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்!

செவ்வாய் 20 ஜூலை 2021