மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஜூலை 2021

பேரு பெகாசஸ்: அப்டேட் குமாரு

பேரு பெகாசஸ்:  அப்டேட் குமாரு

இஸ்ரேல் ஸ்பைவேர் பெகாசஸ் அப்படின்ற சாஃப்ட்வேரை வச்சி நம்ம நாட்ல ராகுல் காந்தியிலேர்ந்து ரிப்போர்ட்டர்ஸ் வரைக்கும் வேவு பாத்திருக்காங்க. ஒரே பிரச்சினையா வெடிச்சுக் கிடக்கு. இதுலேர்ந்து என்ன தெரியுதுனு நம்ம நண்பர் ஒருத்தர்கிட்ட கேட்டேன்... ஒவ்வொரு ஆபீஸ்லயும் வேவு பார்த்து போட்டுக்கொடுக்குறவனுக்கு இனிமே பெகாசஸ்னு பேர் வைச்சிடலாம்னு கூலா சொல்றாரு.

நீங்க அப்டேட் பாருங்க

காளையன்

எவ்வளவு காஸ்ட்லி பேனா வாங்கினாலும்,முதலில் கிறுக்கித் தான் பார்க்கிறோம்.

Mannar & company™

சட்டையில் முதல் பட்டனை போடாதவனை `பொறுக்கி’னு சொன்ன சமூகம்தான் சட்டையின் பட்டன்களை போடாதவனை "மாடல்" என்கிறது!

நாகராஜசோழன்.MA.MLA

மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ~

யாரோட தொலைபேசியும் ஓட்டுக்கேட்கப்படவில்லைனு அவையில சொன்னேன்...

ஆனா என்னோட ஃபோனையும் ஒட்டு கேட்டிருக்காங்களாம் சார்...

பர்வீன் யூனுஸ்

வானொலியில் நேயர் விருப்பம். பஸ்ஸில் டிரைவர் விருப்பம். பென்ட்ரைவில் நம் விருப்பம். இப்படி தான் போகிறது வாழ்க்கை.

மயக்குநன்

பக்ரீத் பண்டிகைக்காக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகளைத் திரும்பப்பெற வேண்டும்!- கேரள அரசுக்கு இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை.

பக்ரீத்தும் அதுவுமா மக்களே 'பலிகடா' ஆயிடக் கூடாதுன்னு சொல்றாங்க போல..?!

நாகராஜசோழன்.MA.MLA.

பெகாசஸ் ஸ்பைவேர்-ல் இருந்து தப்புவது எப்படி?

எங்க போன் எல்லாம் ஒட்டு கேட்டா கேக்கறவன் கதறி கதறி அழுவான், அப்படி பொழம்பி தள்ளி இருப்போம்.

balebalu

தங்க சங்கிலியை கொரோனா நிதியாக அளிக்க முன்வந்த பெண்: அரசு வேலைக்கு பரிந்துரை -செய்தி

என்னது ? ஆளாளுக்கு தங்க சங்கிலி தூக்கிட்டு கிளம்பிட்டாங்க ? ஆடி கார் மாதிரி தங்கமும் இப்போ சாதாரணமாகி விட்டது போல

ச ப் பா ணி

Pull/Push மாதிரிதான்

இந்த வாரண்டிக்கும் கேரண்டிக்குமான குழப்பங்களும்

தர்மஅடி தர்மலிங்கம்

தொற்று முடிவுக்கு வரவில்லை; தொற்று முடிவுக்கு வந்துவிட்டது என்ற எண்ணம் இருக்கக் கூடாது” -மா.சுப்பிரமணியன்,

ஆமாமா... 'இந்த தொற்று இனி தொன்று தொட்டு' வந்துக்கிட்டே தான் இருக்கும்!

மயக்குநன்

நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன!- அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

நீட் தேர்வும்தான்..!

கோழியின் கிறுக்கல்

கோடையில் ஐந்தில் வைத்தால் அரையில் ஓடும் மின்விசிறி,

மழைக்காலத்தில் மட்டும் ஐம்பதில் ஓடுகிறது!!

-லாக் ஆஃப்

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

செவ்வாய் 20 ஜூலை 2021