மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஜூலை 2021

ஆபாச பட புகார்: ஷில்பா ஷெட்டி கணவர் கைது!

ஆபாச பட புகார்: ஷில்பா ஷெட்டி கணவர் கைது!

இந்தி, தமிழ் படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா ஷெட்டி. 2019 ஆம் ஆண்டு ராஜ் குந்தரா என்கிற தொழிலதிபருடன், இவருக்குத் திருமணம் நடைபெற்றது.

நேற்று, நள்ளிரவு ராஜ்குந்தராவை மும்பை காவல்துறை கைது செய்திருக்கிறது. இந்த செய்தி இந்தி திரைப்படத் துறையில் அதிர்வுகளையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

ராஜ்குந்த்ரா, ‘JLMEDIA’ என்ற பெயரில் மொபைல் அப்ளிகேஷனை நிறுவி, அதில் வெப் சீரீஸ்களை வழங்கி வருகிறார். மும்பையில் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் இவர் இந்திய கிரிக்கெட் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஒரு பங்குதாரராகவும் இருக்கிறார்.

இந்த நிலையில் ராஜ்குந்த்ரா கைது குறித்து மும்பை நகரகாவல் துறை ஆணையர் ஹேமந்த் நகர்வே வெளியிட்ட அறிக்கையில், மும்பை குற்றப்பிரிவிற்குக் கடந்த பிப்ரவரி மாதம் சிலர் ஆபாசப்படங்களை உருவாக்கி அதனை மொபைல் அப்ளிகேஷனில் வெளியிடுகிறார்கள் என புகார் வந்தது. இது பற்றி தீவிரமாக விசாரித்தபோது, இந்தஆபாசப்படங்ளை உருவாக்குவதிலும், அதனைமொபைல் அப்ளிகேஷனில் வெளியிடுவதிலும் முக்கிய நபராக ராஜ்குந்த்ரா இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த, ஆதாரங்கள் அனைத்தையும் நாங்கள் சேகரித்துவிட்டோம். இதன்பின்புதான் அவரை நாங்கள் கைது செய்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்கள்.

ராஜ்குந்த்ரா, மீது ஏமாற்றுதல்,மோசமாக நடந்துகொள்வது, ஆபாச வீடியோக்களைத் தயாரித்தல் அதனை பொது இடங்களில் வெளியிட்டது, புத்தகங்களில் ஆபாச புகைப்படங்களைப் புதுப்பித்தது, என்று ஐ.டி சட்டப்பிரிவின் பல்வேறு பிரிவுகளின் கீழ் மும்பை காவல்துறை வழக்கினை பதிவு செய்தனர்.

கைது செய்யப்பட்ட ராஜ்குந்த்ரா உடனடியாக மும்பை குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். காவல்துறைவட்டார தகவல் படி மும்பையின், குற்றப்பிரிவு போலீசார் கடந்த வாரம் தங்களிடம் வந்த புகாரை விசாரித்து, அதன் முடிவில் இரண்டு முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். அதில், தங்களை வலுக்கட்டாயமாக நிர்வாணக் காட்சிகளில் நடிக்க வைத்தார்கள் என்று9 பேர் புகார் அளித்திருக்கிறார்கள்.

படமாக்கப்பட்ட இந்த காட்சிகள் அனைத்தும் மொபைல்போனில் பணம் செலுத்தி பார்க்கக்கூடிய அப்ளிகேஷன்களில் மட்டுமே தெரியக்கூடியவை. இதில் கூடுதலாக சர்ச்சைக்குரிய நடிகையான பூனம்பாண்டே, ராஜ் குந்த்ரா மற்றும் அவரது உதவியாளர் மீது மும்பை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கினை தொடர்ந்துள்ளார்.

பூனம்பாண்டேவின் ஆபாச வீடியோக்களை அவரது அனுமதியில்லாமல் ராஜ்குந்த்ரா தனது மொபைல் அப்ளிகேஷனில் பயன்படுத்தி இருக்கிறார். இதற்குத் தகுந்த நஷ்டஈட்டினை தனக்குத் தரவேண்டும் என்று கேட்டுள்ளார் பூனம் பாண்டே.

-இராமானுஜம்

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

ஜெய் பீம் கதைக்களம்!

2 நிமிட வாசிப்பு

ஜெய் பீம்  கதைக்களம்!

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

2 நிமிட வாசிப்பு

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

செவ்வாய் 20 ஜூலை 2021