மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஜூலை 2021

தமிழை நிராகரிக்கிறாரா மணிரத்னம்?

தமிழை நிராகரிக்கிறாரா மணிரத்னம்?

பொன்னியின் செல்வன் ... இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை முதல்பிரதி அடிப்படையில் மணிரத்னம் இயக்கத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வழங்க இருக்கிறது.

இப்படத்துக்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், கலை இயக்குநராக தோட்டா தரணி, படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத் என இந்திய சினிமாவில் பிரபலமான தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றும் பொன்னியின் செல்வன் படத்தை சர்வதேச தமிழ் சமூகம் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளது. இந்தப் படத்தின் வெற்றி லைகா நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் திரைப்பட தொழிலில் நீடித்திருக்க அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது.

இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு 2019 டிசம்பரில் தொடங்கியது, அதன் பின் பல்வேறு தடைகள், சிக்கல்களை கடந்து படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் இரண்டு பாகங்களாக முதலில் திரையரங்குகளில் திரையிட திட்டமிடப்பட்ட படம் பொன்னியின் செல்வன். முதல்பாகத்துக்கான படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பை முடிக்க முடியாமல் போனது.

அதிகபட்சம் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினால், முதல் பாகம் தயாராகிவிடும் என்று இயக்குநர் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் முதல் பாகத்தை நிறைவு செய்வதற்கான படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2019 டிசம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. 2020 ஜனவரி 2 ஆம் நாள் " பொன்னியின் செல்வன்" பெயர் வடிவமைப்பை தயாரிப்பாளர் தரப்பினர் வெளியிட்டனர்.

அதன்பின் நேற்று(ஜூலை 19,2021) இரண்டாவது வடிவமைப்பை வெளியிட்டு இது முதல் பாகத்துக்கானது என்றும் 2022 ஆம் ஆண்டு படம் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் நாவல் முழுக்க தமிழ்மொழி, தமிழர்களின் ஆட்சித்திறன், தமிழர்கள் கலாச்சாரம், ராஜதந்திரம், போர்க்கலையை பற்றி பேசக் கூடிய புதினமாகும். இதனை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் திரைப்படம் பற்றிபடக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட முதல் பெயர் வடிவமைப்பிலும் இரண்டாவதாக வெளியிட்டுள்ள பெயர் வடிவமைப்பிலும் மருந்துக்குக் கூட தமிழ் இல்லை.

பொன்னியின் செல்வன் சர்வதேச அளவில் பல மொழிகளில் வெளியிடப்பட்டாலும் இப்படத்தை தயாரிப்பவர் யாழ்ப்பாண தமிழர். பார்க்ககூடிய பார்வையாளர்களில் அதிகமானவர்கள் தமிழர்களாகவே இருப்பார்கள் அதிகமான வருவாய் கிடைப்பதற்கான காரணமும் இந்திய தமிழர்களும், புலம்பெயர்ந்த தமிழர்களும்தான். ஆனால் படம் பற்றிய அறிவிப்பில் தமிழுக்கு இடமில்லை என்கிற விமர்சனம் கடுமையாக கோடம்பாக்கத்தில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

தமிழ் படங்கள் தவிர்த்து பிற மொழி படங்கள் எதிலும் ஆங்கில கலப்பு, இந்தளவுக்கு இருப்பது இல்லை தமிழ் படங்களுக்கான வருமானம், பார்வையாளர்கள் உலகம் முழுவதும் இருக்கும் 10 கோடி தமிழர்களை சார்ந்தே இருக்கிறது ஆனால் தாய் மொழி தமிழ் வாய்ப்பு கிடைக்கின்றபோதெல்லாம் சிதைக்கப்பட்டு, பின்னுக்கு தள்ளப்பட்டு வருகிறது என்கிற குற்றசாட்டு நீண்ட காலமாக கூறப்பட்டு வருகின்றது.

தமிழ்தாய் மொழி இல்லை என்றாலும் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கிய படங்கள் அனைத்துக்கும் தூயதமிழ் பெயராகவே வைத்து உள்ளார். தமிழ் பற்றுள்ள இயக்குநர்கள் கூட மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு என்று யோசித்ததில்லை. படத்தின் பெயரும், காட்சிகளும் கவிதை மொழியில் இருக்கும். ஆனால் படத்தில் ஆங்கில கலப்பு அதிகமிருக்கும் வாரணம் ஆயிரம் இலக்கிய தரம் மிக்க தலைப்பு படம் திரையில் விரியும்பொழுது படத்தின் பெயர் தொடங்கி கடைசி பெயர் வரை ஆங்கிலத்தில் வந்துவிழும். அதுபோன்றுதான் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தின் பெயர்களும் கவிதை தனமாக நல்ல தமிழில் பெயர் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் படத்தின் விளம்பரங்கள், புரமோஷன் நிகழ்வுகளில் ஆங்கிலமே அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது அதனால்தான் இயக்குநர் மணிரத்னம் திட்டமிட்டு, தமிழை புறக்கணிக்கிறார் என்கிற குற்றசாட்டு எழுந்திருக்கிறது.

ஷங்கர் இயக்க தயாரித்த முதல்வன் படத்தின் ஒலி, நாடா வெளியீட்டு விழா 1999ம் ஆண்டு சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண்மணி தமிழை தவிர்த்து ஆங்கில மொழியைபயன்படுத்தினார். அப்படத்தின் வசனகர்த்தாவும், எழுத்தாளருமான மறைந்த சுஜாதா பிழைப்புக்கும், சாப்பிடுகிற சோத்துக்கும் தமிழ் தேவைப்படுகிறது.

மேடையில் பேசுவதற்கு மட்டும் ஆங்கிலமா என கேள்வி எழுப்பியதுடன் எந்த மொழியை நம்பி தொழில் செய்கிறோமோ, அந்த மொழியை பேசுவதற்கு கற்றுக்கொள்ளுங்கள் மொழியை வளர்க்கவில்லை என்றாலும் சிதைக்காமலும், பிற மொழி கலப்பால் தமிழை பின்னுக்கு தள்ளுவதை தவிருங்கள் என்பதை மீண்டும் சுஜாதா உயிருடன் வந்து தமிழ்சினிமாவுக்கு சொல்லவேண்டியிருக்கிறது.

-இராமானுஜம்

புதிய ஐபிஎல் அணிகள்: சர்ச்சைப் பின்னணி!

7 நிமிட வாசிப்பு

புதிய ஐபிஎல் அணிகள்:  சர்ச்சைப் பின்னணி!

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

3 நிமிட வாசிப்பு

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்! ...

3 நிமிட வாசிப்பு

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்!

செவ்வாய் 20 ஜூலை 2021