மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 18 ஜூலை 2021

சினி ஜங்ஷன் : பாகுபலியில் நயன்தாரா ரோல், வலிமை டீஸர் ரிலீஸ் தேதி !

சினி ஜங்ஷன் : பாகுபலியில் நயன்தாரா ரோல், வலிமை டீஸர் ரிலீஸ் தேதி !

பாகுபலியில் நயன்தாரா

இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் ராஜமெளலி. இவர் கொடுத்த பாகுபலி, பாகுபலி 2 படங்கள் மிகப்பெரியளவில் ஹிட்டானது. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படம், பிரம்மாண்டத்தின் உச்சம். இந்தப் படங்களின் ஹிட்டுக்குப் பிறகு பாகுபலி படத்தின் சீக்குவல் உருவாகும் என்று சொல்லப்பட்டது. தற்பொழுது, வெப் தொடராக பாகுபலி சீக்குவல் உருவாக இருக்காம். புதிய தகவல்படி, சிவகாமிதேவியாக நயன்தாரா நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம். சிவகாமிதேவியின் இளமை கால வாழ்க்கையை மையமாகக்கொண்டு களம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் தகவல். அதனால், சின்ன வயசு ரம்யாகிருஷ்ணனாக நடிக்க வைக்க நயனிடம் பேச்சுவார்த்தைப் போய்க் கொண்டிருகிறது.

உறியடி விஜய்குமாரின் நெக்ஸ்ட்

உறியடி, உறியடி 2 படங்கள் மூலமாக கவனத்தை ஈர்த்தவர் விஜயகுமார். இவர் இயக்கி நடித்த இந்த இரண்டு படங்களுமே பெரியளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. இப்படங்களைத் தொடர்ந்து, சூர்யாவின் சூரரைப் போற்று படத்துக்கு வசனம் எழுதியிருந்தார். தற்பொழுது, லீட் ரோலில் நடிக்க புதிய படத்தைத் துவங்கியிருக்கிறார். அறிமுக இயக்குனர் அப்பாஸ் இந்தப் படத்தை இயக்குகிறார். விஜய் குமாருக்கு ஜோடியாக அர்ஷா எனும் புதுமுக நடிகை அறிமுகமாகிறார். தற்பொழுது படப்பிடிப்பு துவங்கிவிட்டது. இன்னும் மூன்று மாதத்துக்கு படப்பிடிப்பு நடிக்கும் என்று சொல்லப்படுகிறது.

லைகா தயாரிப்பில் அதர்வா

தள்ளிப் போகாதே, குருதியாட்டம், ஒத்தைக்கு ஒத்த, அட்ரெஸ் உள்ளிட்ட படங்கள் அதர்வா நடிப்பில் தயாராகிவருகிறது. தொடர்ந்து, மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில், லைகா தயாரிப்பிலும் ஒரு படம் நடிக்க இருக்கிறாராம் அதர்வா. இந்தப் படத்தை, களவாணி, வாகை சூட வா படங்களை இயக்கிய சற்குணம் இயக்க இருக்கிறார். முக்கிய ரோலில் ராதிகா சரத்குமார் நடிக்க இருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம் அதர்வா.

வலிமை டீஸர் அப்டேட்

ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் அஜித், கார்த்திகேயா, ஹூமா குரேஷி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகிவரும் படம் வலிமை. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டரெல்லாம் வெளியாகி வெறித்தனமாக டிரெண்டானது. இந்தப் படத்தின் ஃபைனல் ஷூட்டுக்காக ஐரோப்பா செல்ல இருக்கிறது படக்குழு. 10 நாட்கள் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். இந்நிலையில், படத்திலிருந்து சிங்கிள் பாடலொன்று அடுத்து வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அதோடு, வலிமை படத்தின் டீஸரை ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிட இருக்கிறார்களாம்.

விஷ்ணுவிஷாலின் ‘பயணம்’

விஷ்ணுவிஷால் நடிப்பில் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகிவரும் படம் எஃப்.ஐ.ஆர். த்ரில்லர் ஜானரில் உருவாகிவரும் இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் & மாஸ்டரில் நடித்த ரெபோ மோனிகா என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். இதில், விஷ்ணுவிஷாலுக்கு ஜோடியாக ரெபோ மோனிகா நடித்துள்ளார். கெளதம் மேனன் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். இந்தப் படத்திலிருந்து ‘பயணம்’ எனும் வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

- ஆதினி

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

3 நிமிட வாசிப்பு

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

ஞாயிறு 18 ஜூலை 2021