மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 17 ஜூலை 2021

ஷங்கரின் ஃபேவரைட் கான்செப்ட்.. ராம் சரண் கேரக்டர் சீக்ரெட் !

ஷங்கரின் ஃபேவரைட் கான்செப்ட்.. ராம் சரண் கேரக்டர் சீக்ரெட் !

பிரம்மாண்டத்துக்குப் பெயர் போன இயக்குநர் ஷங்கரை இந்தியன் 2 போட்டுத் தாக்கிவருகிறது.

லைகா தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவந்த இந்தியன் 2 பிரச்னை நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இதனால், இவரின் அடுத்தடுத்தப் படங்களை இயக்குவதில் பல சிக்கல்கள் நிலவியது. சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்பின் விளைவினால், அடுத்தப் படத்தில் கவனம் செலுத்த துவங்கியிருக்கிறார் ஷங்கர்.

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்க தில்ராஜூ இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. நீதிமன்ற சிக்கலால் படத்தை துவக்க முடியாத சூழல் நிலவியது. தற்பொழுது, இந்தப் படத்தின் பணிகளில் கவனம் செலுத்தத் துவங்கியிருக்கிறார் ஷங்கர். இந்தப் படத்துக்கான கதை கார்த்திக் சுப்பராஜ் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது.

ராம்சரணின் 15வது படமாக இது உருவாக இருக்கிறது. புது அப்டேட் என்னவென்றால், இந்தப் படத்தில் இரண்டு ரோல்களில் ராம்சரண் நடிக்க இருக்கிறாராம். இதற்கு முன்பாக, மஹதீரா & நாயக் படங்களில் இரட்டை ரோல்களில் ராம்சரண் நடித்திருந்தார். நமக்குக் கிடைத்த தகவல்படி, தந்தை, மகன் என இரண்டு ரோல்களில் வர இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்த மாதிரியான டபுள் ஆக்‌ஷன் ரோல்களில் ஷங்கர் எக்ஸ்பெர்ட். ஜீன்ஸ், இந்தியன், எந்திரன் மற்றும் 2.O படங்களைக் குறிப்பிடலாம்.

ராம்சரணுடன் கொரியன் சிங்கர் சூஷி பே முக்கிய லீடில் நடிக்க இருக்கிறார். அதோடு, அலியா பட், கியாரா அத்வானி, மாளவிகா மோகன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தையும் போய்க் கொண்டிருக்கிறது.

எப்படியும், ஹைதராபாத் பிலிம் சிட்டியில் தான் படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள். ஷுட்டிங் தேதிகளை உறுதிசெய்யும் பணிகளில் ஷங்கர் இருக்கிறாராம். விரைவிலேயே, சர்ப்ரைஸ் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

-தீரன்

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

3 நிமிட வாசிப்பு

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

4 நிமிட வாசிப்பு

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

5 நிமிட வாசிப்பு

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

சனி 17 ஜூலை 2021