மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஜூலை 2021

தனுஷால் இடம் மாறிய இரண்டு இயக்குநர்கள்!

தனுஷால் இடம் மாறிய இரண்டு இயக்குநர்கள்!

ஹாலிவுட் படத்தை முடித்துவிட்ட தனுஷ், தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாளவிகா மோகனனுடன் 'தனுஷ் 43' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து இரண்டு படங்களை அடுத்தடுத்து தொடங்குகிறார் தனுஷ்.

ஒன்று, சன் பிக்சர்ஸ் தயாரிக்க மித்ரன் ஜவகர் இயக்கும் 'தனுஷ் 44' மற்றும் தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கும் 'நானே வருவேன்'. இவ்விரு படங்களோடு, தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கும் படமும் அடுத்து தொடங்கும் திட்டத்திலும் தனுஷ் இருக்கிறார். மீண்டுமொரு தெலுங்கு படம் கமிட் செய்யவும் யோசித்து வருகிறார்.

இப்படியான சூழலில் தனுஷை இயக்க ஒரு வருடத்துக்கும் மேல் காத்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி மோகன். மாரி & மாரி 2 என தனுஷுக்கு கமர்ஷியல் லுக் கொடுத்தவர். சீரியஸாக படம் நடிக்கும்போதெல்லாம் நடுவே பாலாஜி மோகனை வைத்து கமர்ஷியல் படமொன்று கொடுப்பார் தனுஷ். மீண்டும் ஒரு கமர்ஷியல் மாஸ் ஹிட்டுக்குத் திட்டமிட்டார் தனுஷ். ஆனால், பாலாஜி மோகனை மறந்துவிட்டு புதுப்புது படங்களுக்கு ஒப்பந்தமாகிக் கொண்டிருக்கிறார்.

தனுஷுக்காக காத்திருந்து வெறுப்பான பாலாஜி மோகன் தற்போது வெளியேறிவிட்டார். சத்யஜோதி பிலிம்ஸ் தான் இந்தப் படத்தைத் தயாரிக்க இருந்தது.

பாலாஜி மோகன் வெளியேறிவிட்டதால், வேறு இயக்குநரைத் தேடிவந்தனர். அப்போது சிக்கியவர் தான் இளன். ஹரிஷ் கல்யாண் நடிக்க யுவன் தயாரிப்பில் உருவான படம் `பியார் பிரேமா காதல்`. இந்தப் படத்தை இயக்கியவர் இளன்.

பொதுவாக, ஒரு படத்தில் ஹிட் கொடுத்தால் அந்த இயக்குநருக்கு அடுத்த பட வாய்ப்பைக் கொடுப்பார் தனுஷ். அப்படி, தனுஷ் லிஸ்டில் இருந்தவர் இளன். பாலாஜி மோகன் இல்லையென்றதும், இளனை டிக் செய்துவிட்டது சத்யஜோதி பிலிம்ஸ்.

நடுவே, ஹரிஷ் கல்யாண் நடிக்க இளன் இயக்கத்தில் 'ஸ்டார்' எனும் படம் உருவாக இருந்தது. தனுஷ் படத்துக்காக இளன் வந்துவிட்டதால் அந்தப் படம் டிராப் ஆகிவிட்டதாகச் சொல்கிறார்கள். அதுபோல, தனுஷிடமிருந்து வெளியே வந்த பாலாஜி மோகன் சித்தார்த் நடிக்க புதிய படமொன்றைத் தொடங்குகிறார்.

-தீரன்

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

வெள்ளி 16 ஜூலை 2021