மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஜூலை 2021

கமலுடன் விஜய் சேதுபதி: விக்ரம் படப்பிடிப்பு தொடங்கியது!

கமலுடன் விஜய் சேதுபதி: விக்ரம் படப்பிடிப்பு தொடங்கியது!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத்பாசில் உட்பட பலர் நடிக்கும் படம் விக்ரம். இது கமல் நடிக்கும் 232ஆவது படம். 2020 செப்டம்பர் 16 ஆம் தேதி இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்தியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். அதன்பின் ராஜ் கமல் நிறுவனமும் அதுகுறித்து செய்தி வெளியிட்டு உறுதிப்படுத்தியது.

அதன்பின் கமலின் 67ஆவது பிறந்தநாளையொட்டி 2020 நவம்பர் 7 அன்று, அப்படத்தின் பெயரும் முன்னோட்டமும் வெளியிடப்பட்டது. 1986 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான படம் விக்ரம். அந்தப் பெயரையே இந்தப்படத்துக்கும் வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், படக்குழுவினர் இன்று (ஜூலை 16) வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பு….

ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மிகுந்த பொருட்செலவில், பிரம்மாண்ட தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் “விக்ரம்” படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் இனிதே ஆரம்பம். விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் முதல் காட்சியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படமாக்கினார். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பகத் பாசில் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.

கதை, திரைக்கதை, இயக்கம் – லோகேஷ் கனகராஜ், வசனம் – ரத்னகுமார் & லோகேஷ் கனகராஜ், ஒளிப்பதிவு – கிரிஷ் கங்காதரன், இசை – அனிருத், படத்தொகுப்பு – பிலோமின் ராஜ்

கலை இயக்குநர் – N.சதீஸ் குமார், சண்டைப் பயிற்சியாளர் – அன்பறிவு

நிர்வாக தயாரிப்பாளர் – எஸ்.டிஸ்னி, தயாரிப்பாளர் – கமல் ஹாசன் & ஆர்.மகேந்திரன்

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

-இராமானுஜம்

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

2 நிமிட வாசிப்பு

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

4 நிமிட வாசிப்பு

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

பிக்பாஸ் ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

5 நிமிட வாசிப்பு

பிக்பாஸ்  ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

வெள்ளி 16 ஜூலை 2021