மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஜூலை 2021

9 மொழிகளில் காமராஜர் வரலாறு!

9 மொழிகளில் காமராஜர் வரலாறு!

ரமணா கம்யூனிகேஷன் சார்பில் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான காமராஜர் திரைப்படத்தில், காமராஜர் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதனை லட்சக்கணக்கானோர் பார்த்து தங்கள் நட்பு வட்டங்களுக்கும் பகிர்ந்து வருகின்றனர்.

"காமராஜர்" படத்தைத் தயாரித்து இயக்கிய பாலகிருஷ்ணன், காமராஜர் வாழ்க்கை வரலாற்றை "காமராஜர் பொக்கிஷம் மாணவர்களுக்கு" எனும் பெயரில் நூல் தயாரித்திருக்கிறார்

நேற்று காமராஜரின் 119ஆவது பிறந்தநாள். இதனையொட்டி அவர் இறுதிக்காலம் வரை வாழ்ந்து மறைந்த சென்னை தி.நகர் திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் காலை 10 மணிக்குத் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே.வாசன் தமிழ் பதிப்பையும், எவர் வின் பள்ளிக் குழுமத்தின் தாளாளர் புருஷோத்தமன் ஆங்கில பதிப்பையும் வெளியிட்டனர்.

தமிழ் பதிப்பை வெளியிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேசுகிறபோது,

“காமராஜர் புகழ் பரப்புவதை தனது முழு நேர பணியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார் பாலகிருஷ்ணன். காமராஜர் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக இயக்கி தயாரித்து இருக்கிறார்.

அப்படத்தை பல்வேறு மொழிகளில் சப்டைட்டிலுடன், உலகம் முழுவதும் கொண்டு சேர்த்திருக்கிறார். காமராஜர் போன்று திருமணம் செய்துகொள்ளாமல் இன்றளவும் அவரது புகழையும், அவர் வழிநடத்திய அரசியலையும் திரைப்படமாக பதிவு செய்த பாலகிருஷ்ணன், இன்றைய இளம் மாணவ சமூகத்திடம் காமராஜர் வாழ்க்கை வரலாற்றைக் கொண்டு செல்லும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.

அரசியல் கட்சிகள் செய்யவேண்டிய பணியை, லாபநோக்குடன் செயல்படும் திரைத்துறையில் இருக்கும் இயக்குநர் பாலகிருஷ்ணன் இப்போது செய்துள்ளார். அதிகபட்சமாகத் தமிழ்,ஆங்கில மொழிகளில் மட்டுமே காமராஜர் பற்றிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. காமராஜர் 119 வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ரஷ்யன், பிரெஞ்சு, ஜப்பான் என ஒன்பது மொழிகளில் காமராஜர் வரலாறு வெளியிடப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. இவரது புத்தக வெளியீடு, திரைப்பட முயற்சிகளுக்கு நானும் நான் சார்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் எப்போதும் துணை இருப்போம்” என்றார்.

இது சம்பந்தமாக இயக்குநர் பாலகிருஷ்ணனிடம் பேசியபோது, ”பெருந்தலைவர் காமராஜர் அரசியல் கட்சிகளுக்கு அரசியல் வியாபார பொருளாகவே தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறார். அவர் அரசியல் வாழ்க்கையில் கடைப்பிடித்த ஒழுக்கம், நேர்மை, இவற்றை அவர் பெயரைக் கூறி அரசியல் செய்பவர்கள் கூட கடைப்பிடிப்பதில்லை. அவரது வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாகத் தயாரித்து வெளியிடுவதற்குக் கடுமையான நெருக்கடிகளை நான் சந்தித்தேன்.

அப்போது, மத்தியில் ஆட்சியிலிருந்தது காங்கிரஸ் கட்சி தணிக்கையில் கடுமை காட்டினார்கள். அந்தப் படம் வராமல் இருக்கவே முயன்றார்கள். அதையும் கடந்து சொந்தமாகத் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட்டேன். நஷ்டம் ஏற்பட்டது. இருப்பினும் காமராஜர் மீது இருக்கும் பற்றால் எனது திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மூலம் காமராஜர் வாழ்க்கையை ஒன்பது மொழிகளில் வெளியிட்டுள்ளோம். ஏற்கனவே காமராஜர் திரைப்படம் ரஷ்யன், ஆங்கிலம், ஜப்பான் மொழிகளில் சப்டைட்டிலுடன் வெளியிடப்பட்டுள்ளது” என்றார்.

-இராமானுஜம்

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

ஜெய் பீம் கதைக்களம்!

2 நிமிட வாசிப்பு

ஜெய் பீம்  கதைக்களம்!

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

2 நிமிட வாசிப்பு

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

வெள்ளி 16 ஜூலை 2021