மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஜூலை 2021

சினி ஜங்ஷன்: RRR-க்கு சாம்பிள், வாடிவாசல் உறுதி, நாயகனாக மாலிக், லோகி 2

சினி ஜங்ஷன்: RRR-க்கு சாம்பிள், வாடிவாசல் உறுதி, நாயகனாக மாலிக், லோகி 2

நவரசங்களிலிருந்தும் இசை

மணிரத்னம் தயாரிக்கும் ஆந்தாலஜி நவரசா. இதன் டீஸர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், ஒவ்வொரு நாளும் கதைகளில் இடம்பெறும் பாடல்கள் வெளியாகி வருகிறது. கெளதம் மேனன் இயக்கும் சூர்யாவின் ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ கதையில் இடம்பெறும் தூரிகா வெளியாகி வைரலானது. தொடர்ந்து, விஜய் சேதுபதியின் எதிரி கைதியிலிருந்து ‘யாதோ’ எனும் பாடல் வெளியானது. தொடர்ந்து, பாயசம் எனும் கதையில் இடம்பெறும் ‘கண்ணூஞ்சல்’ எனும் வீடியோ பாடல் வெளியாகியிருக்கிறது. இதுமட்டுமின்றி, சூர்யா இடம்பெறும் கதையிலிருந்து ‘அலை அலையாய்’ எனும் மற்றுமொரு பாடலும் இன்று (ஜூலை 16) மாலை 5.00 மணிக்கு வெளியாக இருக்கிறது.

பிரபுதேவா நெக்ஸ்ட்

ஹரஹர மகாதேவகி, கஜினிகாந்த் படங்களை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இவர் இயக்கும் புதிய படத்தில் நடிகராக ஒப்பந்தமாகியிருக்கிறார் பிரபு தேவா. ரைசா வில்சன், வரலக்ஷ்மி நாயகிகளாக நடிக்கிறார்கள். இசை டி.இமான். ஆக்‌ஷன் என்டர்டெய்னராக இருக்கும் என்கிறார்கள். பூஜையோட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

வாடிவாசல் ஃபர்ஸ்ட் லுக்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா பிஸியாக இருக்கிறார். சூரி ஹீரோவாக நடிக்கும் விடுதலை படத்தில் வெற்றி மாறன் மும்மரமாக இருக்கிறார். வாடிவாசல் இருக்கிறதா, இல்லையா எனும் சந்தேகம் பலருக்கும் இருந்தது. அதையெல்லாம் உடைத்தெறியும் விதமாக ஓர் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க தாணு தயாரிக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் டைட்டில் லுக் இன்று மாலை வெளியாகிறது.

அருள்நிதியின் ‘டைரி’

அருள்நிதி நடிப்பில் அடுத்த ரிலீஸ் ‘டைரி’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் இன்னிசை பாண்டியன் இயக்கியுள்ளார். இவர் யாரென்றால், டிமாண்டி காலனி இயக்கிய அஜய் ஞானமுத்து மற்றும் அறிவழகன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்தவர். வெரைட்டியான கதைக்களத்தைத் தேர்ந்தெடுக்கும் அருள்நிதியின் ‘டைரி’ டீஸர் வெளியாகியுள்ளது.

மாலிக்: இன்னொரு நாயகன்

நெட்ஃப்ளிக்ஸில் ‘இருள்’, பிரைமில் ‘ஜோஜி’ படங்களைத் தொடர்ந்து, ஃபகத் ஃபாசிலுக்கு இந்த வருடத்தின் மூன்றாவது ரிலீஸ் 'மாலிக்'. இது, பிரைம் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது. மகேஷ் நாராயணன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நிமிஷா சஜயன், ஜோஜூ ஜார்ஜ், திலேஷ் போத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு. கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ படம் மாதிரியான சாயலில் கேரள ஸ்டைலும் கலந்திருக்கிறது.

தயாரிப்பாளராகும் டாப்ஸி

பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், அனுஷ்கா ஷர்மா, கங்கனா ரணாவத், ஈஷா தியோல் நடிகைகளைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கியிருக்கிறார் டாப்ஸி. அந்தத் தயாரிப்பு நிறுவனத்துக்கு 'அவுட் சைடர் ஃபிலிம்ஸ்' எனும் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் எனும் எண்ணத்தில் தொடங்கியிருக்கிறாராம். விரைவிலேயே, தயாரிக்க இருக்கும் படம் குறித்த தகவல் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

ராகவா லாரன்ஸுடன் தமன்

'சந்திரமுகி 2', 'ருத்ரன்' படங்கள் தொடங்கியதாக தெரியவில்லை. அதற்குள், அடுத்த படத்தை அறிவித்துவிட்டார் ராகவா லாரன்ஸ். வெற்றி மாறன் கதை எழுத எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் படங்களை கொடுத்த துரை செந்தில்குமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கப் போகும் படம் ‘அதிகாரம்’. இந்தப் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. படத்தில் இடம்பெறும் மற்ற கலைஞர்கள் பற்றிய எந்த தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில், படத்துக்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தமாகியிருப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ‘டான்’

டாக்டர், அயலான் படங்களை முடித்துவிட்ட சிவகார்த்திகேயன் தற்போது கைவசம் வைத்திருக்கும் படம் ‘டான்’. அட்லீயிடம் உதவியாளராக இருந்த சிபி சக்கரவர்த்தி இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கோவையில் நடந்து முடிந்தது. தற்போது, அடுத்த கட்ட ஷூட்டிங்கானது சென்னையில் தொடங்கியிருக்கிறது. சென்னை ஷூட்டை முடித்துவிட்டு கோவை, பொள்ளாச்சியில் ஒரு சுற்று படப்பிடிப்பு நடத்தவும் திட்டமாம்.

லோகி 2

தோர் படங்கள் மூலமாகவும், அவெஞ்சர்ஸ் மூலமாகவும் பிரபலமான கேரக்டர் லோகி. தோரின் தம்பி கேரக்டரில் வரும் இவர், நல்லவரா கெட்டவரா என்று ரசிகர்களை குழப்பத்திலேயே வைத்திருப்பார். இந்த கேரக்டரை மையமாக வைத்து உருவாகியிருக்கும் சீரிஸ்தான் ‘லோகி’. இந்த வெப் சீரிஸை Kate Herron இயக்கியிருக்கிறார். கடந்த ஜூன் 9ஆம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியானது. இந்த சீரிஸுக்கு செம ரெஸ்பான்ஸ். வெளியான ஆறு எபிசோடுகளுமே பேய் ஹிட். முதல் சீசன் முடியும்போதே, இரண்டாம் சீசனுக்கான குறிப்புடன்தான் முடிந்துள்ளது. தற்போது, இரண்டாம் சீசனுக்கான பணிகள் மும்மரமாகத் தொடங்கியிருக்கிறதாம்.

- ஆதினி

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

வெள்ளி 16 ஜூலை 2021