மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஜூலை 2021

வலிமையிலிருந்து வெளியாகப் போகும் அடுத்த அப்டேட்!

வலிமையிலிருந்து வெளியாகப் போகும் அடுத்த அப்டேட்!

ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு பலனாக வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் & ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகிவருகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிக்க இறுதிக் கட்டப் பணிகளில் இருக்கிறது வலிமை.

நேர்கொண்டப் பார்வை படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஹெச்.வினோத், போனியுடன் இணைந்திருக்கிறார் அஜித். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். தற்பொழுது, வலிமை படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்தக் கட்டமாக, கிழக்கு ஐரோப்பா நாடுகளில் படப்பிடிப்புக்குச் செல்ல படக்குழு தயாராகிவருகிறது.

படப்பிடிப்பின் இறுதிக்கட்டப் பணிகள் ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தாலும், படத்தின் அப்டேட்டும் இனி ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. வலிமை படத்தின் டீஸர் ரிலீஸூக்கு முன்பாக, படத்திலிருந்து சிங்கிள் பாடலொன்றை வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்காம். குறிப்பாக, அஜித்துக்கு மதுரையில் வரும் ஓபனிங் பாடலாக இந்த சிங்கிள் இருக்கும் என்கிறார்கள். இதற்கான இறுதிக்கட்ட இசைக் கோர்ப்பு பணிகளில் இருக்கிறாராம் யுவன்.

அஜித்துடன் காலா நாயகி ஹூமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, சுமித்ரா, ராஜ் ஐயப்பா, யோகிபாபு மற்றும் புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த வருடத்தில் படம் வெளியாவது உறுதி என்று படக்குழு கூறிவிட்டது. நமக்குக் கிடைத்த தகவல்படி, ஆயுத பூஜை பண்டிகைக்கு படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. ஒரு சில மாதங்களே இருப்பதால் இனி, அடிக்கடி வலிமை அப்டேட்டை கொடுப்பதென முடிவில் இருக்கிறார்களாம்.

-ஆதினி

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

3 நிமிட வாசிப்பு

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

ஐபிஎல் 2021: நான்காவது முறையாகக் கோப்பையை வென்ற சென்னை அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல் 2021: நான்காவது முறையாகக் கோப்பையை வென்ற சென்னை அணி!

அண்ணாத்த டீசர் முழுவதும் ரஜினி

5 நிமிட வாசிப்பு

அண்ணாத்த டீசர் முழுவதும் ரஜினி

வியாழன் 15 ஜூலை 2021