மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஜூலை 2021

சச்சின், தோனியைத் தொடர்ந்து `கங்குலி` பயோபிக்!

சச்சின், தோனியைத் தொடர்ந்து `கங்குலி` பயோபிக்!

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக் கொண்டு பயோபிக் திரைப்படங்கள் அதிகமாக வெளியாகிவருகிறது. குறிப்பாக, இந்தி சினிமாவில் மிகப்பெரிய சினிமா சந்தையாகவே இந்த பயோபிக் படங்கள் பார்க்கப்படுகிறது.

அமீர்கான் நடித்த தங்கல், பிரியங்கா நடித்த மேரிகோம் என எக்கச்சக்கப் படங்களைக் கூறலாம். அப்படி, கிரிக்கெட் வீரர்களின் பயோபிக் படங்களும் வெளியாகியிருக்கிறது.

இம்ரான் ஹாஸ்மி நடிப்பில் கிரிக்கெட்டர் அசாருதீனின் பயோபிக்கான `அசார்`, சச்சின் பயோபிக் ஸ்டோரியான `சச்சின் ; பில்லியன் ட்ரீம்` மற்றும் கேப்டன் கூல் தோனியின் பயோபிக்காக `தி அன்டோல்டு ஸ்டோரி` படங்கள் வெளியானது. இதில், சுஷாந்த் சிங் நடித்து வெளியான தோனி பயோபிக் படம் உலகளவில் கவனம் ஈர்த்தது. இதன், இரண்டாம் பாகம் எடுக்க கூட திட்டமிட்டனர். அதற்குள் சுஷாந்தின் எதிர்பாராத மரணம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.

அடுத்ததாக, இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் பயோபிக் படமாக `83` உருவாகிவருகிறது. கபில் தேவாக ரன்வீர் சிங் நடித்திருக்கிறார். மற்றுமொரு முக்கிய ரோலில் ஜீவா நடித்திருக்கிறார். இந்தப் படம் ரிலீஸூக்குத் தயாராகிவருகிறது. அதோடு, சமீபத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக் படமாக `800` எனும் படம் உருவாக இருந்தது. இந்தப் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருந்தார். ஆனால், பெரும் எதிர்ப்பு நிலவியதால் இந்தப் படம் கைவிடப்பட்டது.

அடுத்ததாக இந்திய கிரிக்கெட்டின் தாதா சவுரவ் கங்குலியின் வாழ்க்கையும் படமாக இருக்கிறது. கங்குலிக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் மறக்கமுடியாத தருணம் இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் போட்டி தொடர். இதை முக்கிய புள்ளியாக வைத்து பயோபிக் உருவாக இருக்கிறதாம்.

குறிப்பாக, லார்ட்ஸ் மைதானத்தில் சட்டையைக் கழட்டிச் சுற்றியதெல்லாம் வேற லெவல் ஆக்ரோஷம். அதைத் திரையில் மீண்டும் பார்க்க இருக்கிறார்கள் ரசிகர்கள். பயோபிக்கிற்கு கங்குலி சம்மதம் தெரிவித்திருக்கும் நிலையில், படத்தில் கங்குலியாக ரன்பீர் கபூர் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. படம் குறித்த பேச்சுவார்த்தை மட்டுமே துவங்கியிருக்கும் வேளையில் பாலிவுட் சினிமாவே சூடி பிடிக்கத் துவங்கிவிட்டது. அந்த அளவுக்கு பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

- ஆதினி

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

4 நிமிட வாசிப்பு

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

2 நிமிட வாசிப்பு

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

3 நிமிட வாசிப்பு

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

வியாழன் 15 ஜூலை 2021