மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஜூலை 2021

தமன் விலகல்... உற்சாகத்தில் சாம் சிஎஸ்

தமன் விலகல்... உற்சாகத்தில் சாம் சிஎஸ்

விஜய்சேதுபதி, மாதவன் நடித்து வெளியான விக்ரம் வேதா படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இசையமைப்பாளர் சாம் சிஎஸ். அதன்பிறகு, எக்கச்சக்கப் படங்களுக்கு இசையமைத்துவிட்டார். தற்பொழுது, தமிழ் மட்டுமின்றி மலையாளம் & தெலுங்கு சேர்த்து மொத்தமாக 15 படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

புதிதாக சாம் சிஎஸ் வசத்தில் இரண்டு பெரிய பட வாய்ப்புகள் வந்திருக்கிறது. இயக்குநர் செல்வராகவன் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘சாணிக் காயிதம்’. ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கிவருகிறார்.. செல்வராகவனுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக முதலில் ஒப்பந்தமானது யுவன் ஷங்கர் ராஜா. செல்வா இயக்கத்தில் யுவன் பார்த்திருக்கிறோம். செல்வா நடிப்பில் யுவன் இசை எப்படி இருக்கப் போகிறதென ஆவலில் இருந்தனர் ரசிகர்கள்.

இப்படத்தை மாஸ்டர் பட இணைத் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்து வருகிறார். சாணிக் காயிதம் படத்தில் பணியாற்ற பெரும்தொகையை சம்பளமாக கேட்டிருக்கிறார் யுவன். திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள் யுவன் கேட்கும் சம்பளம் வராததால், யுவன் படத்திலிருந்து விலகினார். யுவன் விலகியதால், சாணிக் காயிதம் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு சாம் சிஎஸ் கைவசம் சென்றிருக்கிறது.

அடுத்ததாக, ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா நடிப்பில் உருவாகிவரும் படம் எனிமி. நாயகியாக மிருணாளினி ரவி நடித்துவருகிறார். படத்தின் பெரும்பகுதியை துபாயில் நடத்தியது. சமீபத்தில் ஹைதராபாத்தில் ஷூட்டிங்கை முழுமையாக முடித்தது.

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்துவருகிறது. ஆனால், படத்துக்கான இசையமைப்பு மட்டும் துவங்கவில்லையாம். எனிமி படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தமானது தமன். ஆனால், தமிழ் & தெலுங்கு சினிமாவில் எக்கச்சக்கப் படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

இதனால், எனிமி படத்துக்கு இசையமைப்பதில் தாமதம் காட்டுகிறாராம். இந்த தேதிக்குள் இசைப் பணிகள் வேண்டுமென படக்குழு அழுத்தம் கொடுத்திருக்கிறது. அதனால், எனிமி படத்திலிருந்து விலகிவிட்டார் தமன் என்று சொல்லப்படுகிறது.

தற்பொழுது, விஷால் - ஆர்யா நடித்திருக்கும் எனிமி படத்தின் இசையமைப்பு பணிகளும் சாம் சிஎஸ் வசம் செல்கிறது. மிகப்பெரிய இரண்டு படங்களின் வாய்ப்பு கிடைத்திருப்பதால் உற்சாகமாகப் பணியாற்றிவருகிறாராம் சாம் சி.எஸ்.

- தீரன்

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

2 நிமிட வாசிப்பு

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

மத மாற்ற விழிப்புணர்வு குறித்து பேசும் ‘ருத்ர தாண்டவம்’!

23 நிமிட வாசிப்பு

மத மாற்ற விழிப்புணர்வு குறித்து பேசும் ‘ருத்ர தாண்டவம்’!

ஃப்ளைட்டில் ஃபைல்: அப்டேட் குமாரு

4 நிமிட வாசிப்பு

ஃப்ளைட்டில் ஃபைல்: அப்டேட் குமாரு

வியாழன் 15 ஜூலை 2021