மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஜூலை 2021

ஷங்கர் படத்துக்கு கதையெழுதும் இயக்குநர் !

ஷங்கர் படத்துக்கு கதையெழுதும் இயக்குநர் !

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர். இவர் இயக்கத்தில் கடைசியாக ரஜினி நடிக்க எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படம் வெளியானது. இந்தப் படத்துக்குப் பிறகு, ஷங்கரின் தேர்வாக இருந்தது இந்தியன் 2.

கமல்ஹாசன் நடிக்க லைகா தயாரிப்பில் பெரிய பட்ஜெட்டில் இந்தியன் 2 துவங்கியது. துவக்கத்திலிருந்து இப்போதுவரை சிக்கல் மேல் சிக்கலைச் சந்தித்து வருகிறார் ஷங்கர். எப்படியாவது படத்தை முடித்துவிட்டு சிக்கலிலிருந்து வெளியே வரவேண்டுமென்பதில் தீவிரமாக இருக்கிறார்.

இந்தியன் 2 போக, இரண்டு படங்களை ஒப்பந்தம் செய்து வைத்திருக்கிறார் ஷங்கர். ஒன்று, தில்ராஜூ தயாரிப்பில் ராம்சரண் நடிக்கும் படம், ரன்வீர் சிங் நடிக்க அந்நியன் பட இந்தி ரீமேக். இவ்விரண்டு படங்களில் ராம் சரண் படத்துக்கான முதல்கட்டப் பணிகள் தற்பொழுது நடந்துவருகிறது.

பொதுவாக, ஷங்கர் இயக்கும் அனைத்துப் படங்களின் கதையும் ஷங்கருடையதாக இருக்கும். அப்படி இருந்தால் மட்டுமே, இவரின் படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்யும் போது, கதைக்கான உரிமை இவரிடம் இருக்கும். முதன்முதலாக, ராம் சரண் படத்துக்கு ஷங்கர் கதை எழுதவில்லையாம். இயக்க மட்டுமே இருக்கிறாராம்.

அப்படியென்றால், யார் கதை எழுதுகிறார் என்று விசாரித்தால் சுவாரஸ்யமான புதுத் தகவல் கிடைத்தது. ஷங்கரின் படத்துக்கு கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதுகிறாராம். இயக்கத்தை மட்டும் இவர் பார்த்துக் கொள்ள இருக்கிறாராம். இதற்கும் காரணம் சொல்லப்படுகிறது.

பிரதானமாக இந்தியன் 2 பிரச்னை போய்க் கொண்டிருப்பதால் கதை எழுதுவதில் ஷங்கரால் கவனம் செலுத்த முடியவில்லை என்கிறார்கள். கதை சம்மந்தமான எந்தச் சிக்கலும் வரக்கூடாது என்பதால், இளம் இயக்குநருக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்.

அதோடு, ஷங்கர் படத்தில் கதை எழுதுவதற்காக கார்த்திக் சுப்பராஜூக்கு பெரும் தொகையும் சம்பளமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

- தீரன்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

தன் வாயால் சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

7 நிமிட வாசிப்பு

தன் வாயால்  சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

2 நிமிட வாசிப்பு

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

புதன் 14 ஜூலை 2021