மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஜூலை 2021

பக்கத்து மாவட்டத்துலேர்ந்து பேசுறேன்: அப்டேட் குமாரு

பக்கத்து மாவட்டத்துலேர்ந்து பேசுறேன்: அப்டேட் குமாரு

தம்பி போன் பண்ணான். ‘இப்பதான பாத்தோம். அதுக்குள்ள ஏன் போன் பண்றான்னு’ யோசிச்சுக்கிட்டே போனை எடுத்து எங்கடா இருக்கேனு கேட்டேன். இங்க பக்கத்து மாவட்டத்துலேர்ந்துதாண்ணே பேசுறேன்னு சொன்னான். பக்கத்து மாவட்டமா? இப்பதான உன்னை பக்கத்து வீட்ல பாத்தேன்னு நான் கேட்டேன். அண்ணே உங்களுக்கு தெரியாதா, நான் இப்ப அடுத்த தெருவுல நிக்கிறேன். இங்க உள்ள ஃபேஸ்புக் ஃப்ரண்ட்ஸ்லாம் சேர்ந்து இந்த தெருவை தனி மாவட்டமா அறிவிச்சுட்டாங்கண்ணேனு சொன்னான்.

நீங்க அப்டேட் பாருங்க

மயக்குநன்

தமிழக மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன!- சசிகலா.

என்னது... 'மிடாஸ்' மதுபான ஆலைகளை சின்னம்மா மூடப் போறாங்களா..?!

amudu

கொங்குநாடு மாநிலம் உருவாக்க கோவை பாஜக தீர்மானம்.

இந்தியாவில் எல்லாத்துக்கும் ஒரே நாடுன்னு கோஷம் போவீங்க . தமிழ்நாட்டில் மட்டும் நாட்டிற்குள் நாடு கேட்பீங்களா.

சரவணன். ℳ

தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும் - அண்ணாமலை.

இது அந்த அதிமுக மேல சத்தியம்...

பர்வீன் யூனுஸ்

தான் படித்த காலத்தில் ஆல்பாஸ் முறை இருந்திருக்கலாமே என நினைப்பவனே ஆகச் சிறந்த முட்டாள்.

நாகராஜசோழன்.MA.MLA

நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் - சென்னை உயர் நீதிமன்றம்

ரஜினி ~

அப்பாடா எல்லாரும் என்னைய மறங்துட்டாங்க...

ச ப் பா ணி

பெயரளவில் அதிகாரம் வைத்திருப்பவர்கள்

*குடியரசுத்தலைவர்கள்

*குடும்பத்தலைவர்கள்

செங்காந்தள்

அதிகப் 'பொருளுக்கு' குறைந்த 'வரி' விதித்த வள்ளுவரே சிறந்த பொருள் ஆதார நிபுணர்...!!!

தர்மஅடி தர்மலிங்கம்

கொரோனா நெறிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம்!

பேசாம எல்லாரையும் 'தர்மயுத்தம்' பண்ண சொல்லி பனிஷ்மெண்ட் கொடுக்கலாங்களா..??

Mannar & company

ரஜினிகாந்தை, அரசியலில் இணைக்க நினைக்கிறதும், இணைக்கிறதும்..

ஆதார் கார்டையும் - பான் கார்டையும் இணைக்க நினைக்கிறது போலதான்!

மயக்குநன்

நீட் தேர்வு எழுத மாணவர்கள் தயாராக வேண்டும்!- அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

'போங்கப்பா... போய் புள்ளக்குட்டிங்களை ஒழுங்கா படிக்க வைங்கப்பா...'-னு சொல்லாம சொல்லிட்டாரு..!

நாகராஜசோழன்.MA.MLA.

மத்திய அமைச்சர்களில் 90% பேர் கோடீஸ்வரர்கள்!- செய்தி.

அரசியல்வாதிகள்னாலே கோடீஸ்வரர்கள் தானே....

கோழியின் கிறுக்கல்!!

செய்யும் தவறை மறைக்க கண் சிமிட்டி சிரிப்பதை குழந்தைப் பருவத்திலேயே பழகிக் கொள்கிறார்கள் பெண்கள்!!

-மகளதிகாரம்

-லாக் ஆஃப்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

புதன் 14 ஜூலை 2021