மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஜூலை 2021

ராயனாக வரும் ‘நானே வருவேன்’... தனுஷ் படத்தில் எக்கச்சக்க மாற்றம்!

ராயனாக வரும் ‘நானே வருவேன்’... தனுஷ் படத்தில் எக்கச்சக்க மாற்றம்!

காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன படங்களைத் தொடர்ந்து தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவாக இருக்கும் படம் ‘நானே வருவேன்’.

தனுஷ் நடிக்க செல்வராகவன் இயக்க யுவன் ஷங்கராஜா இசையில் என ரசிகர்களின் ஃபேவரைட் மேஜிக்கல் காம்போ மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளது. கலைப்புலி எஸ்.தாணு இந்தப் படத்தைத் தயாரிக்க இருக்கிறார். இந்தப் படத்துக்கு ‘நானே வருவேன்’ எனும் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதோடு, படப்பிடிப்பும் ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்துக்குள் எக்கச்சக்க மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

முதலில், படத்தின் கதைக்களமே மாறுகிறதாம். படத்தின் கதையை முழுமையாக மாற்றி வேறொரு கதையுடன் வருகிறாராம் செல்வராகவன். ராயபுரம் பகுதியில் இருக்கும் அண்ணன் - தம்பி கதையாக இந்தப் படம் இருக்கும் என்கிறார்கள். அண்ணன் ரோலில் தனுஷ் நடிக்கிறார். தம்பி ரோலில் நடிக்க விஷ்ணு விஷாலிடம் பேச்சுவார்த்தைப் போய்க் கொண்டிருப்பதாகவும் தகவல். அதுமட்டுமல்ல, படத்தின் தலைப்பும் மாற்றியிருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு ‘ராயன்’ எனும் பெயரையும் தேர்வு செய்து வைத்திருக்கிறார்கள்.

படத்தின் கதைக்களத்திலிருந்து டைட்டில் வரை மாறுவதால் படப்பிடிப்புக்கு முன்பான பணிகளுக்குக் கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறதாம். அதனால், படத்தின் படப்பிடிப்பும் செப்டம்பர் மாதத்துக்குத் தள்ளிச் செல்வதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படம் கொஞ்சம் தள்ளிப்போவதால், கார்த்திக் நரேன் இயக்கும் ‘தனுஷ் 43’ படத்தை முடித்த கையோடு சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் மித்ரன் ஜவகர் இயக்கும் ‘தனுஷ் 44’ படத்தை முன்னதாக தொடங்குகிறார். இந்தப் படத்தில் தனுஷுடன் நித்யாமேனன், ப்ரியா பவானி ஷங்கர், ஹன்சிகா என மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். அதோடு, தெலுங்கில் நடிக்கும் சேகர் கம்முலா இயக்கும் படத்தையும் தொடங்குகிறாராம் தனுஷ்.

-தீரன்

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

4 நிமிட வாசிப்பு

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

2 நிமிட வாசிப்பு

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

3 நிமிட வாசிப்பு

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

புதன் 14 ஜூலை 2021