மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஜூலை 2021

சினி ஜங்ஷன் ; அஜித், விக்ரம் கொண்டாட காரணம், ரஜினியின் திட்டம், தலைவி வருமா..?

சினி ஜங்ஷன் ; அஜித், விக்ரம் கொண்டாட காரணம், ரஜினியின் திட்டம், தலைவி வருமா..?

சினிமாவின் லேட்டஸ்ட் செய்திகளை ஒரே வாசிப்பில் முழுமையாக தெரிந்துகொள்வதற்கான ஸ்பெஷல் பகுதியே ‘சினி ஜங்ஷன்’. ரஜினி கொல்கத்தாவுக்கும், அஜித் ஐரோப்பாவுக்கும் ஏன் செல்கிறார்கள், இந்தியில் மீண்டும் அசத்தலான ஒரு கதை, விக்ரமையும், அஜித்தையும் கொண்டாட என்ன காரணம், தலைவி வருமா வராதா உள்ளிட்ட பல செய்திகள் உங்களுக்காக வெயிட்டிங்..!

கொல்கத்தாவில் ரஜினி, ஐரோப்பாவில் அஜித்

அண்ணாத்த படத்தோட ஹைதராபாத் ஷெட்யூல் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துட்டு அமெரிக்கா சென்ற ரஜினி, அடுத்தக் கட்டமாக கொல்கத்தாவில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறாராம்.அதோடு, அண்ணாத்த ஷூட்டிங் முடிந்துவிடும். அதுமாதிரி, வலிமை படத்துக்கான படப்பிடிப்புக்காக கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அஜித் பயணப்பட இருக்கிறார். இந்த இரண்டு படங்களுமே உடனடியாக முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஏனெனில், வலிமை வருகிற ஆயுத பூஜைக்கும், அண்ணாத்த படம் தீபாவளிக்கும் வெளியாக இருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தி படம்

புதுப்புது கான்செப்டுகளை தேடிப் பிடித்து அசத்திவருகிறது பாலிவுட் சினிமா. அந்தாதூன் , பதாய் ஹோ , பாலா என சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வரிசையில் புதுக் கதையுடன் களத்துக்கு வரும் படம் Mimi. பாலிவுட் பிரபலங்களான க்ரீத்தி சனோன், பங்கஜ் திரிபாதி லீட் ரோல்களில் நடித்திருக்கிறார்கள். குடும்பத்துக்குத் தெரியாமல் வாடகை தாயாகும் நாயகி, சந்திக்கும் சிக்கல்கள், தாய்மை தரும் எமோஷன், அதற்குள் மத ரீதியான விஷயங்களை ஹியூமருடன் சொல்லியிருக்கும் படம் ‘Mimi’. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வரும் ஜூலை 30க்கு இந்தப் படம் வெளியாக இருக்கிறது. தற்பொழுது, இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகிவருகிறது.


மீண்டும் வில்லேஜ் கதை

ராஜவம்சம், எம்.ஜி.ஆர்.மகன், கொம்புவச்ச சிங்கம்டா, நா நா என எக்கச்சக்கப் படங்களை நடித்து முடித்துவிட்டார் சசிகுமார். அடுத்தென்ன.. அடுத்தென்ன என பிஸியாக இருக்கிறார். சசிக்குமார் நடிக்கப் போகும் புதுப் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. புதுமுகம் ஹேமந்த் குமார் இயக்க பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கிராமப் பின்னணியில் ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்கிறார்கள். மீண்டும் ஒரு வில்லேஜ் கதையில் சசிகுமார் .

நாஸ்டாலஜிக் நினைவுகள்

இணையத்தில் கடந்த இரு தினங்களாக விக்ரம், அஜித் இருவரையும் கொண்டாடிவருகிறார்கள். காரணம் இருக்கிறது. விக்ரமுக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த படம் தில். தரணி இயக்கியிருந்த இப்படம் கமர்ஷியலாக செம ஹிட். இந்தப் படம் வெளியாகி 20 வருடங்கள் ஆகிவிட்டது. அதுபோல, அஜித், தேவயானி நடிக்க அகத்தியன் இயக்கத்தில் வெளியான படம் ‘காதல் கோட்டை’. இந்தப் படத்துக்கு வயது 25. வாட்ஸ் அப் யுகத்தில் இருக்கிறோம். ஆனால், ஒரு காலத்தில் பார்க்காமலேயே கடிதத்தில் காதலித்த காதலர்களின் கதையை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடித்தீர்த்தனர். அதுமட்டுமல்ல, அஜித்துக்கு இன்னொரு மிகப்பெரிய பிரேக் கொடுத்த படம் பில்லா. விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் யுவன் பின்னணியில் வெளியான இப்படம் வெளியாகி 9 வருடம் ஆகிவிட்டது. அதனால், அஜித்தும், விக்ரமும் இணையத்தில் வைரலானார்கள்.

எனிமி ஷூட்டிங் ஓவர்

விஷால் - ஆர்யா நடிக்க ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் எனிமி. துபாய் வரை சென்று படப்பிடிப்பை நடத்தி வந்தனர் படக்குழுவினர். அதோடு, கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்ததும் முதல் ஆளாக படப்பிடிப்புக்குச் சென்றது எனிமி டீம் தான். தற்பொழுது, ஹைதராபாத்தில் நடந்துவந்த படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டது. சீக்கிரமே ரிலீஸை எதிர்பார்க்கலாம்.

ஜாலியா ஒரு ஃபிட்னெஸ்

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் நாயகி த்ரிஷா. ரஜினியுடன் பேட்ட படத்தில் கடைசியாக நடித்திருந்தார். ராங்கி, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, ராம் மற்றும் பொன்னியின் செல்வன் படங்கள் உருவாகிவருகிறது. நடிகர்கள் உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். அப்படி, ஷூட்டிங் இல்லாத நேரத்தில் ஃபிட்னெஸூக்காக ஸ்டைலிஷான சைக்கிள் ஒன்றை வாங்கியுள்ளார் த்ரிஷா. கிழக்கு கடற்கரைச் சாலையில் காலை நேரத்தில் ஜாலியாகச் சுற்றித்திரிகிறாராம் த்ரிஷா.

மீண்டும் ஓடிடியில் ஃபகத்

இந்த வருடம் ஃபகத் பாசிலுக்கு இருள், ஜோஜி இரண்டு படங்களுமே ஓடிடியில வெளியாகியிருக்க நிலையில, ஃபகத்தோட அடுத்த ரிலீஸான மாலிக் படமும் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. மகேஷ் நாராயணன் இயக்கியிருக்கும் இப்படத்தில் நிமிஷா சஜயன், ஜோஜூ ஜார்ஜ், திலேஷ் போத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், படத்திலிருந்து சித்ரா குரலில் தீரமே பாடல் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

மீண்டும் சொதப்பல் டீம் !

2012ல் சித்தார்த்துக்கு பெரிய பிரேக் கொடுத்தப் படம் ‘காதலில் சொதப்புவது எப்படி’. பாலாஜி மோகன் இந்தப் படத்தை இயக்கியிருப்பார். சித்தார்த்துக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருந்தார். காதலில் சொதப்பும் நாயகனின் கதையே களம். யூத்ஃபுல்லாக படமும் செம ஹிட். மாரி, மாரி2 என பாலாஜி மோகனும் கமர்ஷியல் மாஸ் ஜானருக்குள் போய்விட்டார். தற்பொழுது, மீண்டும் சித்தார்த் - பாலாஜி மோகன் கூட்டணி இணைய இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தலைவி ரிலீஸாகுமா?

விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் , அரவிந்த்சாமி நடிப்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் பயோபிக் படமாக உருவாகிவருகிறது ‘தலைவி’. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் வெப் தொடராக ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ‘குயின்’ வெப் சீரிஸ் வெளியானது. அடுத்ததாக, மீண்டுமொரு பயோபிக்காக ‘தலைவி’ உருவாகி வருகிறது. ஜெயலலிதா ரோலில் கங்கனாவும், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமியும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் ஏப்ரல் 23ஆம்தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், சொன்ன தேதியில் வெளியாகவில்லை. படம் வெளியாவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இந்நிலையில், படம் குறித்த பல்வேறு வதந்திகள் பரவிவருகிறது. இந்நிலையில், கங்கனா இன்ஸ்டா பதிவில், “தலைவி படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம். நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகு தலைவி படத்தை வெளியிடுவோம்” என்று கூறியுள்ளார்.

காஜலின் துணிச்சலான முடிவு

தமிழின் முன்னணி நாயகிகளாக இருப்பவர்கள் பெரும்பாலும் அம்மா கேரக்டர்களில் நடிக்க விரும்ப மாட்டார்கள். மார்கெட் போய்விடும் அல்லது தொடர்ந்து அம்மா கேரக்டருக்கு மட்டுமே நடிக்க அழைப்பார்கள். சினிமா எதிர்காலத்தை மனதில் கொண்டு அம்மா கேரக்டர்களை பெரும்பாலும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். ஆனால், நயன்தாராவும் த்ரிஷாவும் அம்மா கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். இந்த வரிசையில் , காஜல் அகர்வாலும் அம்மா கேரக்டரில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ‘ரவுடி பேபி’ எனும் புதுப் படத்தில் கமிட்டாகியிருக்கார் காஜல். அந்தப் படத்தில் சிறுமிக்கு தாயாக நடிக்க இருக்காராம். நல்ல விஷயம் தானே!

- ஆதினி

.

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

புதன் 14 ஜூலை 2021