மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஜூலை 2021

மன்னிப்பு கேட்ட ஜகா படத்தின் இயக்குநர்!

மன்னிப்பு கேட்ட ஜகா படத்தின் இயக்குநர்!

'ஆடுகளம்' முருகதாஸ், கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‛ஜகா'. இதை ஆர்.விஜயமுருகன் இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியானது. இதில் சிவன் போன்று வேடமணிந்து முருகதாஸ் ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் சுவாசம் செய்வது போன்று இருந்தது. இது இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்றும், இதை நீக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என இந்து இயக்கங்கள் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இயக்குநர் ஆர்.விஜயமுருகன் வெளியிட்ட அறிக்கையில் "ஜகா முதல் பார்வை பலரின் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. எங்கள் நிறுவனத்தின் பெயரே ஓம் டாக்கீஸ். பாபநாசம் சிவன் கோயிலில் பூஜை போட்டுவிட்டுதான் படப்பிடிப்பைத் தொடங்கினோம்.

அப்படி இருக்கும்போது சிவபெருமானை அவமதிப்போமா? கோவிட் 19 விழிப்புணர்வு நோக்கத்தில் வைக்கப்பட்ட காட்சிதான் அது. கொரோனா வழிகாட்டு முறைகளை மீறக்கூடாது என கடவுளே சொல்வது போன்றுதான் அந்த முதல் பார்வை.

மனிதர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதைவிட கடவுள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்ற எண்ணத்தில்தான் அந்த முதல் பார்வை வடிவமைக்கப்பட்டது.

படத்தில் எந்த இடத்திலும் கடவுள் அனுமதிக்கப்படவில்லை. அதுபோன்ற எண்ணம் ஒருபோதும் எங்களுக்கு ஏற்படாது. மலிவான விளம்பரம் போடும் விருப்பம் எங்கள் குழுவினருக்குத் துளியும் இல்லை.

இருப்பினும் எந்தவித உள்நோக்கமும் இல்லாது செயல்பட்ட எங்களின் இத்தகைய செயல் பலரின் மனது புண்படுத்தியது அறிந்து வருந்துகிறேன். அதற்காக மன்னிப்பு கோருவதோடு கொரோனா இல்லாத உலகம் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

-இராமானுஜம்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

தன் வாயால் சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

7 நிமிட வாசிப்பு

தன் வாயால்  சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

2 நிமிட வாசிப்பு

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

புதன் 14 ஜூலை 2021