மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஜூலை 2021

கமல்ஹாசனை கவுரப்படுத்திய இசைக்கலைஞர்கள் சங்கம்!

கமல்ஹாசனை கவுரப்படுத்திய இசைக்கலைஞர்கள் சங்கம்!

தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் தொடங்கப்பட்டு நாற்பத்தி ஆறு ஆண்டு காலமாகிறது. இந்தச் சங்கத்தில் தமிழ் சினிமாவின் மூத்த கலைஞர் நடிகர், நடன இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்ட கமல்ஹாசன் கவுரவ உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்.

தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம், சென்னை வடபழநியில் உள்ளது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிப் படங்களின் படப்பிடிப்பும் சென்னையில் நடந்துகொண்டிருந்த நேரத்தில் இந்தச் சங்கம் தொடங்கப்பட்டது.

இந்தச் சங்கத்தில் இசையமைப்பாளர், பாடகர்கள், பாடலாசிரியர்கள், பாடகிகள் என நான்கு பிரிவினரும் உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். தமிழ்த் திரையுலகத்தின் அத்தனை இசைக்கலைஞர்களும் தற்போது இந்தச் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர் .

தற்போது இந்தச் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தினா இருக்கிறார்.

பெருமைமிக்க இந்தச் சங்கத்தில் கமல்ஹாசன் கவுரவ உறுப்பினராகச் சேர்க்கப்பட்டுள்ளார். இதை அடுத்து கமல்ஹாசனுக்கான சங்கத்தின் உறுப்பினர் அட்டையை சங்கத் தலைவர் தினாவும் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமாரும் நேற்று கமல்ஹாசனிடம் நேரில் வழங்கினார்.

கமல்ஹாசன் நடிகர் என்பதையும் தாண்டி பாடகர் மற்றும் பாடலாசிரியராகவும் இருக்கிறார், என்பதால் அவர் இந்தச் சங்கத்தில் இணைக்கப்பட்டது பொருத்தமானதுதான். நடிகர் கமல்ஹாசன் ஞாயிறு ஒளி மழையில், பன்னீர் புஷ்பங்களே, கண்மணி அன்போடு, நினைவோ ஒரு பறவை, ராஜா கைய வைச்சா, சுந்தரி நீயும் சுந்தரன் நானும், இஞ்சி இடுப்பழகி, சாந்துப் பொட்டு போன்ற புகழ் பெற்ற பாடல்களைப் பாடியிருக்கிறார்.

இதேபோல் கமல்ஹாசன் சில பாடல்களையும் எழுதியிருக்கிறார். உன்னைவிட இந்த உலகத்துல என்ற பாடலை விருமாண்டி படத்திற்காக எழுதியுள்ளார். இந்தப் பாடல் திரை இசையில் இன்று வரையிலும் தனித்துவம் பெற்றுத் திகழ்கிறது.

சினிமாவின் பெரும்பான்மையான துறைகளிலும் சிறந்த விற்பன்னராக தன்னை நிரூபித்திருக்கும் கமல்ஹாசன், இசைக்கலைஞர்கள் சங்கத்தில் கவுரவ உறுப்பினராக இணைந்து சங்கத்துக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.

-இராமானுஜம்

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

4 நிமிட வாசிப்பு

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

2 நிமிட வாசிப்பு

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

3 நிமிட வாசிப்பு

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

புதன் 14 ஜூலை 2021