மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஜூலை 2021

சினி ஜங்ஷன்: வலிமை செய்த சாதனை... நானே வருவேன் புது டைட்டில்!

சினி ஜங்ஷன்: வலிமை செய்த சாதனை... நானே வருவேன் புது டைட்டில்!

த்ரிஷ்யம் கூட்டணியின் அடுத்த படத்தின் அப்டேட், வலிமை செய்த சாதனை, தெலுங்கு அசுரனுக்குத் தயாராகும் ரசிகர்கள், சிவகார்த்திகேயனுக்குக் கிடைத்த சர்ப்ரைஸ், தனுஷ் பட டைட்டில் மாற்றம் என சினிமா வட்டாரத்தில் நடந்த முக்கிய அப்டேட்டுகளின் தொகுப்பே சினி ஜங்ஷன்!

ஓடிடியில் தெலுங்கு அசுரன்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான அசுரன் படம் தமிழில் செம ஹிட். இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் ‘நாரப்பா’. தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்க இந்தப் படம் உருவாகி வந்தது. இந்த நிலையில், இந்தப் படம் பிரைம் ஓடிடியில் வருகிற ஜூலை 20ஆம் தேதி வெளியாகுமென்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மோகன்லால் நடிக்கும் 12th மேன்

‘த்ரிஷ்யம்’, ‘த்ரிஷயம் 2’ என இரண்டு ஹிட்டுக்குப் பிறகு மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவாகிவரும் படம் ‘12th மேன்'. சமீபத்தில் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. 12 பேர் மட்டுமே நடிப்பது இந்தப் படத்தில் ஸ்பெஷல். அதில், 6 ஆண்களும் 6 பெண்களும் நடிக்க இருக்கிறார்கள். அதில், அதிதி ரவி, அனுஸ்ரீ, பிரியங்கா நாயர், வீனா நந்தகுமார், லியோனா லிஷாய், ஷிவதா ஆகியோர் ஃபீமேல் லீடாகவும், சய்ஜு குருப், அனு மோகன், சந்துரு நாத் இவர்களெல்லாம் மோகன்லாலுடன் இணைந்து நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையோடு இடுக்கி, கொச்சி பகுதியில் படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்கள்.

நவரச முதல் சிங்கிள்

நெட்ஃப்ளிக்ஸ் தயாரிப்பில் மணிரத்னத்தின் ஆந்தாலஜி ‘நவரசா’. ஒன்பது இயக்குநர்களின் ஒன்பது கதைகளோடு இந்தப் படம் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இதில் சூர்யா நடிக்கும் கதையை கெளதம் மேனன் இயக்கியிருக்கிறார். காதலும் காதல் நிமித்தமுமாக உருவாகியிருக்கும் இக்கதைக்கு ‘கிட்டார் கம்பிமேலே நின்று’ எனப் பெயரிட்டுள்ளனர். இந்தக் கதையிலிருந்து ‘தூரிகா’ எனும் சிங்கிள் வெளியாகி வைரலாகிவருகிறது.

வலிமை செய்த சாதனை

அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணியில் உருவாகிவரும் படம் வலிமை. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று மாலை வெளியானது. யூடியூப்பில் வெளியான இதன் மோஷன் போஸ்டர் வீடியோவானது வெளியான 15 மணி நேரத்தில் 4 மில்லியன் பார்வைகளைக் கடந்திருக்கிறது. அதோடு, போஸ்டர் இணையத்தில் 5 மில்லியன் லைக்குளை 12 மணி நேரத்தில் கடந்து சாதனைப் படைத்துள்ளது.

மகனாக வந்த தந்தை

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு டாக்டர், அயலான் படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன. இவர் தயாரிப்பில் வாழ் திரைப்படம் இணையத்தில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், மகிழ்ச்சியான செய்தி ஒன்றை ரசிகர்களுக்காகப் பகிர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அவர் சொன்ன செய்தி இதுதான்... “18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக. என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளில் நன்றி" என்று கூறியுள்ளார்.

சார்பட்டா பரம்பரை டிரெய்லர்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா கலையரசன், சஞ்சனா நடராஜன், பசுபதி, ஜான் விஜய், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சார்பட்டா பரம்பரை. திரையரங்குக்கென திட்டமிட்டு, பிரைம் ஓடிடியில் ஜூலை 22ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், படத்தின் டிரெய்லர் வீடியோவானது நாளை 12 மணிக்கு வெளியாக இருக்கிறது.

தீவிர ரேஸிங்கில் நிவேதா பெத்துராஜ்

ஒருநாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். டிக்டிக்டிக், திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு நடிப்பைத் தாண்டி கார் ரேஸிங் மீது பெரும் ஆர்வம் வந்திருக்கிறது. சமீபத்தில் இவர் ரேஸ் கார் ஓட்டும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டும் பயிற்சியில் லெவல் 1 முடித்துவிட்டாராம் நிவேதா. அஜித் போல ரேஸிங்கில் ஒரு ரவுண்ட் வருவாரென எதிர்பார்க்கலாம்.

‘நானே வருவேன்’ புது டைட்டில்?

10 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் - செல்வராகவன் கூட்டணி மீண்டும் இணையும் திரைப்படம் ‘நானே வருவேன்’. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், படத்தின் டைட்டில் மாற்றுவது குறித்து படக்குழு யோசித்துவருகிறது. கொஞ்சம் மாஸாக டைட்டில் இருக்க வேண்டுமென யோசித்து வருகிறார்களாம். அதன்படி, படத்துக்கு ‘ராயன்’ எனும் டைட்டில் வைக்க இருப்பதாக ஒரு தகவல்.

ஆதினி

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

ஜெய் பீம் கதைக்களம்!

2 நிமிட வாசிப்பு

ஜெய் பீம்  கதைக்களம்!

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

2 நிமிட வாசிப்பு

10 ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் வாணி விஸ்வநாத்

செவ்வாய் 13 ஜூலை 2021