மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஜூலை 2021

தனுஷைத் தொடர்ந்து தெலுங்கு செல்லும் சிவகார்த்திகேயன்

தனுஷைத் தொடர்ந்து தெலுங்கு செல்லும் சிவகார்த்திகேயன்

தமிழ் நடிகர்கள் தெலுங்கு சினிமாவிலும், தெலுங்கு நடிகர்கள் தமிழ் சினிமாவிலும் தடம் பதிக்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். தெலுங்கிலிருந்து மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன் வருவது போல, தமிழிலிருந்து பல நடிகர்கள் தெலுங்கு செல்கிறார்கள்.

சமீபத்தில் விஜய்சேதுபதி டெட்லி வில்லனாக நடித்து உப்பென்னா வெளியானது. தொடர்ந்து தெலுங்கில் நடிக்க கதை கேட்டுவருகிறார். அடுத்ததாக, நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் தனுஷ். சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ஆகஸ்டுக்கு மேல் உருவாக இருக்கிறது. மற்றுமொரு படமும் தனுஷ் தெலுங்கில் கமிட்டாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த வரிசையில் சிவகார்த்திகேயனும் தெலுங்கு செல்கிறார். சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி பெரிய ஹிட்டான படம் `ஜாதி ரத்னாலு`. ரொமாண்டிக் காமெடி ஜானரில் இந்தப் படம்வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் தமிழ் - தெலுங்கு என பைலிங்குவல் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். இதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக போய்க் கொண்டிருக்கிறது. தெலுங்கில் பிரபலமான நடிகை நடிப்பார் என்றும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது . விரைவிலேயே இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

தற்பொழுது, நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படம் ரிலீஸூக்குத் தயாராக இருக்கிறது. தியேட்டரா அல்லது ஓடிடியா என்பதில் பெரும் குழப்பம் நீடிக்கிறது. தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் `அயலான்` டிசம்பரில் வெளியாக இருக்கிறது. அதோடு, சிபி எனும் புதுமுக இயக்குநரின் `டான்` படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

- ஆதினி

ஹிட் அடித்த பாலகிருஷ்ணா, தோல்வியில் மோகன்லால்

3 நிமிட வாசிப்பு

ஹிட் அடித்த பாலகிருஷ்ணா, தோல்வியில் மோகன்லால்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

மோகன்லால் விரும்பி கேட்ட பிரபு

3 நிமிட வாசிப்பு

மோகன்லால் விரும்பி கேட்ட பிரபு

செவ்வாய் 13 ஜூலை 2021