மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஜூலை 2021

ரோசமான ஆங்கில குத்துச் சண்டை : அசத்தலான சார்பட்டா டிரெய்லர்!

ரோசமான ஆங்கில குத்துச் சண்டை : அசத்தலான சார்பட்டா டிரெய்லர்!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் சார்பட்டா பரம்பரை படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இயக்குநர் பா.ரஞ்சித், அடுத்தடுத்து மெட்ராஸ், கபாலி, காலா என மூன்று பெரிய ஹிட் படங்களைக் கொடுத்துவிட்டார். மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ‘பரியேறும் பெருமாள்’ , மற்றும் அதியன் ஆதிரை இயக்கத்தில் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என தயாரிப்பாளராகவும் இரண்டு படங்கள் வெளியாகிவிட்டது. தொடர்ந்து, பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இந்தியில் படம் இயக்க இருந்தார். ஆனால், அதற்கான நேரம் அதிகமாக தேவைப்படுவதால் , முன்பாக இவர் இயக்கத்தில் ரிலீஸூக்குத் தயாராகியிருக்கும் படம் ‘சார்பட்டா பரம்பரை’.

குத்துச்சண்டையை மையமாகக் கொண்டு 80களில் நடக்கும் கதைக்களமாக ‘சார்பட்டா பரம்பரை’ உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக ஆர்யாவும், நாயகியாக துஷாராவும் நடித்துள்ளனர். தவிர, பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா, கலையரசன், ஜான் விஜய், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீலம் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில், முரளி ஒளிப்பதிவில் வருகிற ஜூலை 22ஆம் தேதி தெலுங்கு & தமிழில் பிரைம் வீடியோ ஓடிடியில் படம் வெளியாக இருக்கிறது.

ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்தியாவுக்குள் வந்த பொழுதுபோக்கு விளையாட்டு குத்துச்சண்டை. வெள்ளையர்கள் நாட்டை விட்டுச் சென்றபோதிலும், நம்மூரில் பெரிய தாக்கத்தை இந்த விளையாட்டு ஏற்படுத்தியது. ரோசமான குத்துச் சண்டையாக வடசென்னைப் பகுதிகளில் வளர்ந்தது. அதை பின்புலமாக வைத்து படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

80களின் நிலம், படத்தின் விஸூவல், சந்தோஷின் பின்னணி, குத்துச்சண்டைக் காட்சிகளென திரையரங்கிற்கான படமாகவே இருக்கிறது. ஆனால், ஓடிடியில் வருவது மட்டுமே ரசிகர்களுக்கு வருத்தம். இருப்பினும், புதுமையான கதையாக சார்பட்டா பரம்பரை இருக்கும் என்பது மட்டும் டிரெய்லர் மூலம் உறுதியாகிறது.

-ஆதினி

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

2 நிமிட வாசிப்பு

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

3 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

செவ்வாய் 13 ஜூலை 2021