மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஜூலை 2021

காதல் முறிவை உறுதிசெய்த அனுபமா

காதல் முறிவை உறுதிசெய்த அனுபமா

சினிமா நடிகர், நடிகைகளை பற்றிய எதிர்மறையான, மற்றும் காதல், விவகாரத்து செய்திகள் அபூர்வமாகவே இருக்கும். தற்போது வாரம் ஒரு முறை திரை கலைஞர்கள் சம்பந்தபட்ட விவாகரத்து, காதல் சமாச்சாரங்கள் ஊடகங்களில் முக்கிய செய்தியாகிவிடுகிறது.

'பிரேமம்' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இந்த படத்திற்கு பிறகு தமிழில் 'கொடி' திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து புகழ்பெற்றார்.

அதன்பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னடத்தில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது ஆர்.கண்ணன் இயக்கும் 'தள்ளிப் போகாதே' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

திரைப்படங்களில் தற்போது பிசியாகிவிட்ட அனுபமா குறித்த திருமண வதந்திகள் அவ்வவ்போது தலைப்பு செய்திகளாகி வந்தன. காதல் கிசுகிசுசெய்தியில் செஞ்சுரி அடித்தவர் என்றே கூறலாம்.

அதிலும் பிரபல கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரன் திருமணம் என்ற செய்தி தொடர்ந்து இணையத்தில் பரவியது. பும்ரா - அனுபமா காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் என்ற அளவுக்கு செய்திகள் வெளியானது. ஆனால் அனுபமா பரமேஸ்வரன் குடும்பத்தினர் இது வதந்தி என்று முற்றுப்புள்ளி வைத்தனர்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீவிரமாக இருக்கும் அனுபமா, ரசிகர்களிடம் சமீபத்தில் உரையாடியபோது, நிஜ வாழ்க்கையில் காதலித்தது உண்டா என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அனுபமா, ஆம், நான் ஒருவரை உண்மையாக காதலித்தேன். ஆனால் அந்த காதல் நீண்ட காலம் நிலைக்கவில்லை. காதல் முறிவு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டோம் என்றார்.

மேலும் மன நிம்மதிக்கு என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, சமீபத்தில்தான் ஓவியம் வரைய தொடங்கியிருக்கிறேன், அதில் கவனம் செலுத்துவது மிகவும் நன்றாக இருக்கிறது. அமைதி என்பது நமக்குள் இருந்து வரவேண்டும் என்றார். தெலுங்கில் பிரபலமாகி வரும் நடிகர் ராம் பொத்னேனி பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, நல்ல நண்பர் என்றார். உங்களுக்கு பிடித்த உணவு என்ன என்றதற்கு, அம்மா சமைக்கும் உணவுகள் பிடிக்கும். கேரளா உணவு வகைகள் அனைத்தும் பிடிக்கும். பிரியாணியை விரும்பி சாப்பிடுவேன் என்று கூறினார்.

-இராமானுஜம்

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

8 நிமிட வாசிப்பு

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

செவ்வாய் 13 ஜூலை 2021