�
ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் அண்ணாத்த காமெடி, சென்டிமெண்ட், ஆக்ஷன் கலந்த கலகலப்பான படமாக உருவாகி இருக்கும் இந்தப் படம் வருகிற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி வெளியீடு என்று சன்பிக்சர்ஸ் அறிவித்தது.
ஆனால் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. படத்தை முழுமையாக முடிந்து எடிட் செய்தபிறகு இன்னும் சில காட்சிகள் தேவை என தெரியவந்திருக்கிறது. ரஜினிகாந்த் சம்பந்தபட்ட காட்சிகள் அனைத்தும் ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது எடுத்து முடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. படத்தை முழுமையாக பார்த்தபின் ரஜினிகாந்த் சம்பந்தபட்ட காட்சிகளும் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று இயக்குநர் தரப்பு கூறியிருக்கிறது.
சமீபத்தில் தான் மருத்துவப் பரிசோதனைக்காகஅமெரிக்கா சென்று சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். இந்நிலையில் படத்தின் வெற்றி கருதி, தற்போது அவர் நாளை அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புக்காக கொல்கத்தா செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
இன்னும் 20 நாட்கள் வரை படத்தின் படப்பிடிப்பு நடத்த வேண்டி உள்ளதால் நாளை முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.
**-இராமானுஜம்**
�,