மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஜூலை 2021

தமிழ் எழுத்து வடிவத்தை வலிமை சிதைக்கிறதா?

தமிழ் எழுத்து வடிவத்தை வலிமை சிதைக்கிறதா?

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் முதல் பார்வை நேற்று (11.07.2021) மாலை வெளியானது.

இதையொட்டி படக்குழுவினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

ரசிகர்களின் நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டது. “வலிமை” படக்குழு ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் வகையில் அவர்களுக்கு, விருந்து கொடுக்க முடிவு செய்துள்ளனர். ரசிகர்களின் பேரார்வத்தைத் தணிக்கும் வகையில் “வலிமை” படத்தின் முதல் தோற்றத்தை தற்போது வெளியிட்டுள்ளனர்.

11.07.2021 அன்றுமோஷன் போஸ்டர் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்தே, படத்தின் தலைப்பு மற்றும் #ValimaiMotionPoster என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் பிரபலமாகி, வைரலாக பரவி வருகிறது, இது உலகளவில் “வலிமை” படத்தின் மீதான ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை எடுத்துக்காட்டும்படி அமைந்துள்ளது.

“வலிமை” படத்தின் படப்பிடிப்பு முழுதாக முடிக்கப்பட்டுவிட்டது. இந்த ஆண்டு இறுதியில் “வலிமை” திரைப்படம் உலகளவில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டில் உலகளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பைக் குவித்திருக்கும் தமிழ்ப் படமான “வலிமை” படத்தைத் தயாரிப்பாளர் போனி கபூர் (BayView Projects) மற்றும் Zee Studios இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, பானி, சுமித்ரா, அச்சியுந்த் குமார், ராஜ் அய்யப்பா, புகழ் மற்றும் யோகி பாபு உடன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இயக்குநர் எச்.வினோத் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார். படத்தில் மிக வலுவான தொழில்நுட்பக் குழுவினரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு செய்துள்ளார். அதிரடி சண்டைக் காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைத்துள்ளார். கே.கதிர் கலை இயக்கம் செய்ய, அனு வர்தன் இந்தப் படத்தில் ஆடை வடிவமைப்பாளராகவும், பி.ஜெயராஜ் படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

படக்குழுவினர் இப்படிச் சொன்னாலும் வெளியில் வேறு மாதிரி விமர்சனங்கள் வருகின்றன. படம் குறித்து கலவையான விமர்சனங்கள் இருக்கின்றன. அதேசமயம் படத்தின் பெயர் எழுதப்பட்டது குறித்து தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துள்ளன

இந்தியாவில் எந்த மொழியிலும் படத்தின் பெயரை எழுத்தின் வடிவத்தைச் சிதைத்து வடிவமைப்பது இல்லை. ஆனால் தமிழகத்தில் தமிழ் எழுத்து வடிவத்தை விளம்பரம் என்கிற பெயரில் சிதைத்து வருகின்றனர் திரைத்துறையினர். ஆதரவு வேண்டும் என்பதற்காக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்கிற பேதம் இல்லாமல் இதைக் கண்டுகொள்வது இல்லை கண்டிப்பதும் இல்லை.

படத்தின் பெயர் வலிமை, ஆனால் தமிழில் எழுதப்பட்டிருப்பதோ வவிமை என்று இருக்கிறது. அதாவது லி என்கிற எழுத்து வி என்று இருக்கிறது.

ஒரு தமிழ்ப்படத்தின் பெயரைத் தமிழில் சரியாக எழுதமுடியாத அவலம் தமிழகத்தில்தான் நிலவுகிறது என்கிற ஆதங்கமும், புலம்பலும் எதிரொலிக்கிறது. தமிழை வளர்க்க வேண்டும், செம்மைப்படுத்த வேண்டும் என்கிற அரசாங்கம் தமிழ் எழுத்து வடிவத்தைச் சிதைப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.

இராமானுஜம்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

பிக்பாஸ் வெற்றியாளர் ராஜூ இறுதியில் பேசியது என்ன?

3 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் வெற்றியாளர் ராஜூ இறுதியில் பேசியது என்ன?

வெங்கட்பிரபுவின் மன்மத லீலை!

4 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவின் மன்மத லீலை!

திங்கள் 12 ஜூலை 2021