மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஜூலை 2021

அப்பா விரல் பிடித்திருக்கிறார்- சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

அப்பா விரல் பிடித்திருக்கிறார்- சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இன்று (ஜூலை 12) ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.எப்போதுமே தனது தந்தையார் மீது பொசசிவ் ஆக இருக்கும் சிவகார்த்திகேயன் பல மேடைகளில் தன் தந்தை பற்றிய பேச்சை எடுத்ததுமே கண் கலங்கிவிடுவார்.

இந்த நிலையில் தனக்கு ஆண் குழந்தை பிறந்ததால் தன் தந்தையே தனக்கு மீண்டும் வந்து பிறந்திருப்பதாக நெகிழ்ந்து போய் தனது சமூக தள பக்கத்தில் பகிர்ந்துகொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

“18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம்” என்று தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சமீபத்தில் சிவகார்த்திகேயனின் தந்தை என்று குறிப்பிட்டு இன்னொரு நபரைச் சொல்லி தவறான தகவல்களை பேட்டியாக அளித்திருந்தார் பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா. அப்போது கூட சிவகார்த்திகேயன் இதை மறுக்க வேண்டும் என்று பலரும் அவரிடம் தெரிவித்தனர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கடந்துவிட்டிருந்தார் சிவகார்த்திகேயன்.

இப்போது தனது மகன் மூலம் தனது தந்தையைப் பெற்றெடுத்திருப்பதாக பெருமிதம் கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன். தனது பிறந்த சிசுவின் பிஞ்சு விரல்களையும் தன் தந்தையார் புகைப்படத்தையும் சிவகார்த்திகேயன் பகிர, சமூக தளங்களில் அவருக்கு நெகிழ்ச்சியான வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

-வேந்தன்

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

2 நிமிட வாசிப்பு

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

திங்கள் 12 ஜூலை 2021