மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஜூலை 2021

திருப்பதி சென்ற நடிகை நமீதா : காரணம்?

திருப்பதி சென்ற நடிகை நமீதா : காரணம்?

தமிழ் சினிமாவில் மச்சான் என்கிற வார்த்தையை பிரபலப்படுத்திய நடிகை நமீதா திருமணத்துக்கு பின் சினிமா வட்டாரத்திற்குள் வரவில்லை, நடிக்கவும் இல்லை கொரோனா ஊரடங்கு காலத்தில் ஓடிடி தளம் தொடங்க போவதாகவும், நமீதா தியேட்டர்ஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரிக்க போவதாகவும் பரபரப்பை கிளப்பினார்.

திடீர் என்று கணவருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நேற்று சென்றார் என்ன என்று விசாரித்தபோது தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பாவ் பாவ் என்ற படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாரித்துள்ளார். அவரே ஹீரோயினாகவும் நடித்துள்ளார். இந்த படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது.

இதை தொடர்ந்து படம் வெற்றி பெறவும், தொடர்ந்து படம் தயாரிக்கவும், நடிக்கவும், புதிதாக தொடங்கி உள்ள ஓடிடி தளம் வெற்றி பெறவும் வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அவரது கணவர் வீரேந்திர சவுத்ரியுடன் சாமி கும்பிட சென்றதாக கூறினார்கள்

தரிசனம் முடிந்து வெளியில் வந்த நமீதா நிருபர்களிடம் கூறும்போது ஏழுமலையானை தரிசனம் செய்தது சந்தோஷமாக இருந்தது. நான் நடித்த பாவ் பாவ் படம் படப்பிடிப்பு முடிந்து திரையிட தயாராகி வருகிறது. நமீதா தியேட்டா்ஸ் என்ற பெயரில் புதிய ஓடிடி செயலி, தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கிறேன் என்றார்.

இராமானுஜம்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்: விரைவில் விசாரணை அறிக்கை!

2 நிமிட வாசிப்பு

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்:  விரைவில் விசாரணை அறிக்கை!

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார் ...

3 நிமிட வாசிப்பு

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார்

திங்கள் 12 ஜூலை 2021