மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஜூலை 2021

பெண்களை தற்காத்துகொள்ளும் ஆயுதம் அவளிடமே உள்ளது : மெஹ்ரின்

பெண்களை தற்காத்துகொள்ளும் ஆயுதம் அவளிடமே உள்ளது : மெஹ்ரின்

பெண் என்பவள் அழகு பதுமை மட்டும் அல்ல அவளுக்குள் வீரம், சுயமரியாதை, தன்னம்பிக்கை எல்லாம் இருக்கிறது. ஆணாதிக்க சமூகத்தில் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை தனது திருமணத்தை ரத்து செய்ததன் மூலம் உணர்த்தியவர் நடிகை மெஹ்ரின்.

நெஞ்சில் துணிவிருந்தால் எனும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மெஹ்ரின் பிர்சடா. தனுஷின் பட்டாஸ் படத்தின் மூலம் பிரபலமானவர். கிருஷ்ணா காடி வீர பிரேம கதா என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.. பில்லவுரி எனும் பாலிவுட் படத்திலும் நடித்துள்ளார்.

பஞ்சாப்பை சேர்ந்த மெஹ்ரினுக்கும், அரசியல்வாதி ,தொழிலதிபர் என்கிற பன்முகம் கொண்ட பாவ்யா பிஷ்னாய் என்பவருக்கும் ஜெய்ப்பூரில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் எப்போது நடக்கும் என்று அவர் சார்ந்தவர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்றும், தனது நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தார் மெஹ்ரின்.

மணமகன் பாவ்யா பிஷ்னாய் அரசியல் பின்னணி மற்றும் கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்தவர். அந்த குடும்பத்தினர் மெஹ்ரினை ஒரு அழகு மருமகளாக மட்டுமே வைத்துக் கொள்ள விரும்பியுள்ளனர். திருமணத்திற்கு பின் அவர் சினிமாவில் நடிக்க கூடாது. குடும்ப விழாக்கள் தவிர வேறு பொதுவானவிழாக்களில் கூடகலந்து கொள்ளக்கூடாது என்று பல கட்டுப்பாடுகளை திருமணத்திற்கு முன்பு விதித்ததால் அதனை ஏற்க மறுத்து மெஹ்ரின் நிச்சயதார்த்தத்தை ரத்து செய்ததாக கூறப்பட்டது.

இதனை மெஹ்ரின் தற்போது தனது ட்வீட் மூலம் மறைமுகமாக உறுதிப்படுத்தி இருக்கிறார். உலகிலேயே மிகவும் ஆபத்தான பெண் என்பவள் யார் என்றால், எவள் ஒருத்தி உன் வாள் வேண்டாம் எனக் கூறுகிறாளோ, அவளை தற்காத்துக் கொள்ள கத்தி அவளிடமே உள்ளதாக அர்த்தம் என்று எழுதியிருக்கிறார்.

இராமானுஜம்

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

3 நிமிட வாசிப்பு

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

3 நிமிட வாசிப்பு

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

2 நிமிட வாசிப்பு

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

திங்கள் 12 ஜூலை 2021