மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஜூலை 2021

இலங்கை - இந்தியா இடையிலான ஒரு நாள் போட்டி தள்ளிவைப்பு!

இலங்கை - இந்தியா இடையிலான ஒரு நாள் போட்டி தள்ளிவைப்பு!

கொழும்பில் வரும் 13ஆம் தேதி தொடங்க இருந்த இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிராக இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள நிலையில், இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு தாயகம் திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணியினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவருக்கு (ஜிம்பாப்வே) கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்.

இதற்கிடையே, அந்த அணியின் உதவி ஊழியர் (வீரர்களின் ஆட்டம் குறித்த புள்ளி விவரங்களை ஆய்வு செய்பவர்) ஜி.டி.நிரோஷன் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இலங்கை அணி வீரர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. அவர்கள் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் இந்திய தொடருக்காக நேற்று கொரோனா தடுப்பு வளையத்துக்குள் (பயோ பபுள்) வர திட்டமிட்டு இருந்தனர். அவர்களது தனிமைப்படுத்துதலை மேலும் இரண்டு நாட்கள் அதிகரித்து அதற்கு பிறகு மேலும் ஒருமுறை கொரோனா பரிசோதனை நடத்தி அந்த முடிவுக்குத் தகுந்தபடி கொரோனா தடுப்பு வளையத்துக்குள் கொண்டு வரலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், கொழும்பில் வரும் 13ஆம் தேதி தொடங்க இருந்த இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மாற்றப்பட்ட அட்டவணையின்படி முதலாவது ஒரு நாள் போட்டி 18ஆம் தேதி நடக்கிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி 20ஆம் தேதியும், மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 23ஆம் தேதியும் நடைபெறுகிறது.

மூன்று ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் முறையே 25, 27, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிகிறது. போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து வாரிய அதிகாரி ஒருவர், “இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் வரும் 13ஆம் தேதிக்குப் பதிலாக 18ஆம் தேதி தொடங்கும். வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் கலந்து ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இலங்கை அணியின் மாற்று வீரர்கள் (Alternate Squad) பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் இந்திய அணியுடன் மோதும் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து இந்தியா - இலங்கை இடையேயான கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக ரத்து செய்யப்படலாம் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-ராஜ்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

ஞாயிறு 11 ஜூலை 2021