மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஜூலை 2021

வலிமை: அட்டகாசமான அஜித் லுக்!

வலிமை: அட்டகாசமான அஜித் லுக்!

ரசிகர்களின் காத்திருப்புக்கு பலனளித்துவிட்டது. வலிமை படத்திலிருந்து அதிகாரப்பூர்வ அப்டேட் வந்துவிட்டது. அஜித் ரசிகர்களுக்கான பிக் டே என்றே கூறலாம்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிக்க உருவாகிவரும் படம் வலிமை. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் தவமாய் தவமிருந்தார்கள். அப்படி, இப்படியென ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடாமல் காலம் தாமதித்துவந்தார் தயாரிப்பாளர் போனிகபூர். இறுதியாக, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. செம ஸ்டைலிஷான லுக்கில் அஜித் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகிவருகிறது.

நேர்கொண்டப் பார்வை படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஹெச்.வினோத், போனியுடன் இணைந்திருக்கிறார் அஜித். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.

தற்பொழுது, வலிமை படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்துவருகிறது. இந்நிலையில், ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அப்டேட் விட்டு அசரடித்திருக்கிறார் தயாரிப்பாளர் போனிகபூர்.

திரும்பும் இடமெல்லாம் வலிமை அப்டேட் கேட்டுக் கொண்டிருந்த ரசிகர்கள் இன்னும் கொஞ்ச தினத்துக்கு கொண்டாட்ட மனநிலையுடன் இருப்பார்கள். குறிப்பாக, போனிகபூரை கலாய்த்து மீம்களை பதிவிடுவது குறையும் என்று கூறலாம்.

- ஆதினி

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

3 நிமிட வாசிப்பு

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

ஞாயிறு 11 ஜூலை 2021