மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஜூலை 2021

சார்பட்டாவுக்கு அடுத்து.. சத்தமில்லாமல் புதிய படத்தைத் துவங்கும் பா.ரஞ்சித்

சார்பட்டாவுக்கு அடுத்து.. சத்தமில்லாமல் புதிய படத்தைத் துவங்கும் பா.ரஞ்சித்

அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பா.ரஞ்சித். மெட்ராஸ், கபாலி, காலா என ரஞ்சித் எடுத்த ஒவ்வொரு படமுமே பெரியளவில் ரசிகர்கள் கவனம் ஈர்த்தது. வசூலிலும் எந்த சிக்கலுமின்றி வெற்றிப்படமாக மாறியது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்ததாக ரிலீஸூக்குத் தயாராகியிருக்கும் படம் ‘சார்பட்டா பரம்பரை’. ஆர்யா, துஷாரா, கலையரசன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் குத்துச்சண்டைப் போட்டியை மையமாக் கொண்டு கதைப் பேச இருக்கிறார் ரஞ்சித்.

திரையரங்க அனுபவத்தை மனதில்கொண்டு பெரும் பொருட்செலவில் இப்படம் உருவானது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மொபைல் திரைக்கு படம் வருகிறது. பிரைம் ஓடிடியில் ஜூலை 22ஆம் தேதி நேரடியாக வெளியாகிறது சார்பட்டா பரம்பரை. மொபைல் திரையில் பார்க்காமல், ஹோம் தியேட்டர் சிம்ஸத்துடன் பெரிய திரையில் பார்க்க வாய்ப்பிருப்பவர்களுக்கு நிச்சயம் புது அனுபவமாக இருக்கும்.

காலா முடித்த கையோடு பிர்சா முண்டா வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் திட்டத்தில் இருந்தார். அதற்கான கதை விவாதம், ஸ்கிரிப்ட் பணிகளெல்லாம் நடந்தது. ஆனால், பிர்சா முண்டா உருவாக காலதாமதமாகுமென்பதால், சார்பட்டா பரம்பரை படத்தை ஆர்யாவை வைத்து துவங்கினார்.

தற்பொழுது, பிர்சா முண்டாவுக்கு முன்பாக இன்னொரு புதிய படமொன்றையும் முடித்துவிடும் திட்டத்தில் இருக்கார் பா.ரஞ்சித். நாயகி மையப்படுத்திய கதையாக உருவாக இருக்காம். சார்பட்டாவில் நடித்த துஷாரா லீட் ரோலில் நடிக்க இருக்கிறார். படத்தின் கதையிலிருந்து லொக்கேஷன் வரை அனைத்தும் சத்தமே இல்லாமல் தயார் செய்துவிட்டார். அதோடு, ஓடிடியில் படத்தை வெளியிடும் திட்டத்தை மனதில் கொண்டே இந்தப் படம் உருவாகிறதாம்.

கூடுதலாக, படத்தின் படப்பிடிப்பையும் அடுத்த வாரம் துவங்க இருக்கார் பா.ரஞ்சித். இரண்டு மாதங்களில் படப்பிடிப்பை முடித்துவிடவும் திட்டமென்கிறார்கள். முந்தைய படம் வெளியாவதற்கு முன்பே, இத்தனை அவசரமாக படப்பிடிப்புக்குச் செல்ல என்ன காரணம், எந்த அறிவிப்புமின்றி புதிய படத்தை ஏன் துவங்குகிறார் என்பதற்கான விடைகள் விரைவில் தெரியவரும். தகவல் வந்ததும், அந்த செய்தியையும் அப்டேட் செய்துவிடலாம்.

-தீரன்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

ஞாயிறு 11 ஜூலை 2021