மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஜூலை 2021

ஜெயம்ரவி தேர்வு செய்த நடிகை !

ஜெயம்ரவி தேர்வு செய்த நடிகை !

ஜெயம்ரவிக்கு கோமாளி திரையரங்கிலும், பூமி திரைப்படம் ஹாட் ஸ்டாரிலும் மிகப்பெரிய ஹிட் கொடுத்தப் படங்கள். சொல்லப் போனால், ஜெயம்ரவியின் 25வது படமாக பூமி சமீபத்தில் வெளியானது.

அடுத்தடுத்து மூன்று படங்கள் ஜெயம்ரவி நடிப்பில் தயாராகிவருகிறது. அகமது இயக்கத்தில் ‘ஜன கன மன’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் மற்றும் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கும் படம். இதில், ஜெயம்ரவிக்கு அடுத்த ரிலீஸாக தயாராகிவருவது ‘ஜன கன மன’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, ரிலீஸூக்கான பணிகள் போய்க் கொண்டிருக்கிறது. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் பெரும்பகுதியிலான படப்பிடிப்பை முடித்துவிட்டார் ஜெயம்ரவி.

ஜெயம்ரவியின் 28வது படமாக கல்யாண கிருஷ்ணன் இயக்கும் படம் உருவாக இருக்கிறது. பூலோகம் படத்துக்குப் பிறகு, மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்திருக்கிறது. இந்தப் படத்தில் புது முகமாக நடிக்க வைக்க வலியுறுத்தியிருக்கிறார் ஜெயம்ரவி.

பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடிக்க ப்ரியா பவானி ஷங்கர் ஒப்பந்தமாகியிருக்கிறார். விரைவிலேயே படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

கூடுதல் சர்ப்ரைஸ் என்னவென்றால், ஜெயம்ரவியுடன் இணைந்து ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க இருக்காராம் ப்ரியா பவானி ஷங்கர். லேசான ரோலாக மட்டுமே நடித்து வந்தவரை, ஆக்‌ஷன் ரோலில் ரசிகர்கள் பார்க்க இருக்கிறார்கள்.

படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் முழுமையாக முடிந்துவிட்டதாம். ஸ்கிரிப்டில் துவங்கி லொக்கேஷன் வரை எல்லாம் உறுதியாகிவிட்டது என்று சொல்லப்படுகிறது. எப்படியும், JR28 படமானது ஆகஸ்ட்டில் துவங்கிவிடுமென்கிறார்கள்.

- ஆதினி

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

ஞாயிறு 11 ஜூலை 2021