மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஜூலை 2021

நெய்மருக்கு ஆறுதல் சொன்ன மெஸ்ஸி

நெய்மருக்கு ஆறுதல் சொன்ன மெஸ்ஸி

கால்பந்து ரசிகர்களுக்கு திக் திக் நிமிடங்களாக இன்றைய தினம் நடந்து முடிந்திருக்கிறது கோபா அமெரிக்கா கால்பந்து கோப்பை போட்டி. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் இந்திய நேரப்படி அதிகாலை கோபா அமெரிக்கா கால்பந்து கோப்பையின் இறுதி போட்டி நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில், கால்பந்து விளையாட்டின் தேசமான பிரேசிலும், அர்ஜெண்டினாவும் மோதிக் கொண்டன.

நடப்பு சாம்பியனான நெய்மரின் தலைமையிலான பிரேஸில் அணியானது, மீண்டும் கோப்பையைக் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், மெஸ்ஸி தலைமையில் களமிறங்கிய அர்ஜெண்டினா அணியானது போட்டி துவங்கிய நொடியிலிருந்தே சுறுசுறுப்புடன் மைதானத்தை சுற்றிவந்தனர். போட்டியின் முதல் பாதியான 22 நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரரான ஏஞ்சல் டி மரியா ஒரு கோல் மட்டும் அடித்திருந்தார். மிட் ஃபீல்டில் இருந்து லாங் பாஸில் வந்த பந்தினை கோல் கீப்பரின் தலைக்கு மேலே கொண்டுச் சென்று கோலாக்கினார்.

இரண்டாம் பாதியில் இரு அணியுமே கடுமையாக டிஃபென்ஸ் செய்து விளையாடின. குறிப்பாக, அர்ஜெண்டினாவின் தடுப்பு அரணைத் தாண்டி, பிரேசில் வீரர்களின் பந்தானது கோல் கம்பத்துக்குள் செல்லவில்லை. இரண்டாம் பாதியில் இரண்டு அணியுமே கோல் எதுவும் போடவில்லை. அதன்படி, 1-0 என்கிற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி கோப்பையை வென்றது அர்ஜெண்டினா அணி.

1993-லிருந்து கோபா அமெரிக்கா கோப்பையை வெல்ல முடியாமல் தவமிருந்த அர்ஜென்டினா அணியின் கனவானது 28 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேறியுள்ளது. பொதுவாக கிளப் அணிக்காக மட்டுமே பந்தினை உதைக்கும் மெஸ்ஸியின் கால்கள், சொந்த நாட்டுக்காக விளையாடி கோப்பையை வென்றிருக்கிறது.

இந்த கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் மெஸ்ஸி 6 போட்டிகளில் விளையாடி நான்கு கோல் அடித்துள்ளார். அதுபோல, நெய்மர் இரண்டு கோல்கள் அடித்துள்ளார். அதனால், நெய்மர், மெஸ்ஸி இருவருமே 2021 கோபா அமெரிக்கா கால்பந்து விளையாட்டின் சிறந்த வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, நெகிழ்ச்சியான சம்பவமொன்றும் அரங்கேறியது. இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணியானது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பிரேஸில் வீரர் நெய்மர் நேராக மெஸ்ஸியை நோக்கி வந்தார். நெய்மரை கட்டித்தழுவி ஆறுதல் சொன்னார் மெஸ்ஸி. அதோடு, எமோஷனலாகிவிட்ட நெய்மரை முதுகில் தட்டிக் கொடுத்து முத்தமிட்டார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. மேலும், அந்த நிகழ்வு ரசிகர்களை சிலிர்ப்பில் ஆழ்த்திவிட்டது. யார் வென்றலும் யார் வீழ்ந்தாலும் நெய்மர் மற்றும் மெஸ்ஸி மீதான காதல் மட்டும் ரசிகர்களுக்கு குறையாது.

- ஆதினி

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

ஞாயிறு 11 ஜூலை 2021