மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஜூலை 2021

D44 அப்டேட் ; தனுஷ் படத்தில் மூன்று நாயகிகள்!

D44 அப்டேட் ; தனுஷ் படத்தில் மூன்று நாயகிகள்!

ஹாலிவுட், கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என எல்லா பக்கமும் தெறிக்கவிடும் நடிகர் தனுஷ். தனுஷின் 43வது படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடந்துவருகிறது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அடுத்ததாக, 'தனுஷ் 44' படத்துக்குத் தயாராகிவருகிறார் தனுஷ். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்துக்கு 'D44' என தற்காலிகமாகப் பெயரிட்டுள்ளனர். மித்ரன் ஜவஹர் 'யாரடி நீ மோகினி', 'குட்டி' மற்றும் 'உத்தம புத்திரன்' ஆகிய படங்களில் தனுஷூடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.

D44-யின் ஸ்பெஷல் என்னவென்றால், “3’’ படத்தில் துவங்கி பல படங்களில் பட்டையை கிளப்பிய அனிருத் - தனுஷ் காம்போ இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.

இந்த தனுஷ் - அனிருத் காம்போவான ‘DnA’-வுக்கு ரசிகர்கள் கொலவெறியுடன் வெயிட்டிங்கில் இருக்கிறார்கள். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த இருவரும், ஏறக்குறைய 5 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட்டில் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில், படத்தின் புது அப்டேட் ஒன்றும் கசிந்துள்ளது. என்னவென்றால், 'D44' படத்தில் தனுஷுடன் மூன்று முன்னணி நாயகிகள் நடிக்கவுள்ளனர். அதாவது, ப்ரியா பவானிஷங்கர், நித்யா மேனன் மற்றும் ஹன்சிகா ஆகியோர் நடிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த மூன்று நடிகைகளுமே சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏற்கெனவே நடித்திருப்பதால், தயாரிப்பு நிறுவன தரப்பிலிருந்து, தற்பொழுது பேச்சுவார்த்தைப் போய்க் கொண்டிருக்காம்.

இந்தப் படத்தோடு, தனுஷின் 45வது படமான செல்வராகவன் இயக்கும் 'நானே வருவேன்' படமும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.

ஆதினி

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

சனி 10 ஜூலை 2021