மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஜூலை 2021

புஷ்பா படக்குழு தேடும் விநியோகஸ்தர்!

புஷ்பா படக்குழு தேடும்  விநியோகஸ்தர்!

தெலுங்கில் தயாரிக்கப்பட்ட பாகுபலி இரண்டு பாகங்களும், பெரும்பான்மையான இந்திய மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது.

இந்திய திரைப்பட வசூல் வரலாற்றில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது. அந்தப் படத்தில் நாயகனாக நடித்த பிரபாஸுக்கு ஆந்திராவை கடந்து இந்தியா முழுவதும் ரசிகர் கூட்டம் உருவானதுடன்,அவர் நடிக்கும் படங்களின் வியாபார எல்லை விரிவடைந்தது. அவரது சம்பளமும் உயர்ந்தது. பான் இந்தியா படம் என்கிற கலாச்சாரம் தொடங்கியது.

அந்த ஆசையில் தெலுங்கில் பல நடிகர்கள் தற்போது தங்களது படங்களை பான்-இந்தியா படமாக உருவாக்கி வருகிறார்கள்.

அல்லு அர்ஜுனின் தெலுங்குப் படங்கள் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யூட்டியூபில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றவை. அதனால் அவர் நாயகனாக நடித்துள்ள புஷ்பா படத்தை அப்படி வெளியிட திட்டமிட்டு உள்ளார்கள். ஆனால், இந்தியில் புஷ்பா படத்தை வெளியிட இன்னமும் பிரபலமான விநியோகஸ்தர் கிடைக்கவில்லை.

பாகுபலி படத்தை பிரபல இந்தி திரையுலக இயக்குனர் கரண் ஜோஹர் வெளியிட்டார். KGF- 2 படத்தை பிரபல பர்ஹான் அக்தர் நிறுவனமும், 'லிகர்' படத்தை கரண் ஜோஹர் நிறுவனமும் இந்தியில் வெளியிடுகின்றனர். அது போல தங்களது 'புஷ்பா' படத்திற்கு பெரிய நிறுவனத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.

-இராமானுஜம்

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

3 நிமிட வாசிப்பு

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

4 நிமிட வாசிப்பு

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

5 நிமிட வாசிப்பு

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

சனி 10 ஜூலை 2021