மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஜூலை 2021

வலிமை ஷூட்டிங் பகுதியை ஆக்கிரமித்த பீஸ்ட் டீம்

வலிமை ஷூட்டிங் பகுதியை ஆக்கிரமித்த பீஸ்ட் டீம்

தமிழ் சினிமாவின் வசூல் ஜாம்பவான்களாக வலம் வருகிறார்கள் விஜய் மற்றும் அஜித். சமீபகாலமாக இவர்கள் நடிக்கும் படங்களெல்லாம் ஹிட் லிஸ்ட் தான். அதோடு, வசூலிலும் அசத்தல் சாதனை படைத்து வருகிறது.

விஜய்க்கு கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் நடித்த ‘மாஸ்டர்’ வெளியானது. அதுபோல, அஜித்துக்கு கடைசியாக 2019ல் ‘நேர்கொண்டப் பார்வை’ வெளியானது. விஜய் , அஜித் படங்களை ரசிகர்கள் ஒப்பிடுவது காலம் காலமாக நடந்து வருகிறது. நடிகர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள்.

தற்பொழுது, ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் அஜித்தும், நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் விஜய்யும் பிஸியாக நடித்து வருகிறார்கள். சொல்லப் போனால், மாஸ்டர் வெளியான நேரத்திலேயே வலிமை வெளியாகியிருக்க வேண்டியது. படத்தின் கதைக்களத்தினால் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. தற்பொழுது, வலிமை படம் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை எட்டிவிட்டது. ஹைதராபாத்தில் படத்தின் இறுதி ஷெட்யூலை முடிக்க இருக்கிறது படக்குழு.

விஜய்க்கு பீஸ்ட் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிவடைந்துவிட்ட நிலையில், தற்பொழுது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. புது அப்டேட் என்னவென்றால், அஜித்தின் வலிமை படப்பிடிப்பு நடந்த இடத்தில் தான், தற்பொழுது விஜய்யின் பீஸ்ட் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறதாம்.

பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. அதற்காக மெகா செட் ஒன்றும் தயார் செய்திருக்கிறர்கள் படக்குழுவினர். செட் பணிகளில் எக்கச்சக்க லைட்டிங் செய்திருக்கிறாராம் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா. எந்த அளவுக்கென்றால், லோக்கலில் வாங்கிய லைட் போதாமல், மும்பையிலிருந்து லைட்ஸ்களை இறக்கியிருக்கிறார்.

அதோடு, அஜித்தின் வலிமைப் படப்பிடிப்பு நடந்த லொக்கேஷனில் தான், தற்பொழுது பீஸ்ட் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது. முன்னதாக, வலிமை படத்துக்கான ஆக்‌ஷன் சீக்குவன்ஸ்களை இங்குதான் படமாக்கினார்கள். தற்பொழுது, விஜய் படத்துக்கான பாடல் காட்சிக்கான ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல, விஜய்யின் மெர்சல், கமல்ஹாசனின் இந்தியன் 2 உள்ளிட்ட பல படங்களின் படப்பிடிப்பு இந்த லொக்கேஷனில் நடந்திருக்கிறது. சென்னையின் புறநகர் பகுதியென்பதால் சுதந்திரமாகவும், அமைதியாகவும் படப்பிடிப்பு எடுக்க உகந்த இடம். அதனால், பெரும்பாலான நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் தேர்வாக இந்த லொக்கேஷன் இருக்கும்.

- தீரன்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

சனி 10 ஜூலை 2021