மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஜூலை 2021

நயன்தாரா, பிரபுதேவா படங்களை தயாரிக்கும் பைனான்சியர்!

நயன்தாரா, பிரபுதேவா படங்களை தயாரிக்கும் பைனான்சியர்!

கொரோனா என்கிற நோய் மனித சமூகத்துக்கு பல்வேறு அனுபவங்களை கொடுத்திருப்பதுடன், புதிய மாற்றங்களுக்கு, புதிய முயற்சிகளுக்கான வாசலை திறந்துவிட்டிருக்கிறது. ஊரடங்கு காலத்தில் முழுமையாக முடக்கிவைக்கப்பட்டது சினிமா துறை. இந்த சூழல் திரைப்படதுறையில் பல்வேறு மாற்று சிந்தனைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

முதலாளிகள் நிறைந்திருந்த தமிழ் சினிமா 1990களுக்கு பின் தரகு முதலாளிகள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. சொந்த முதலீட்டில் படக் குழுவினருக்கு அட்வான்ஸ் கொடுத்து படப்பிடிப்பை தொடங்கி பற்றாக் குறைக்கு விநியோகஸ்தரிடம் முன்பணம், பைனான்சியர்களிடம் கடன் வாங்கி படத்தை முடித்து வெளியிட்டு வந்தனர்.

தரகு முதலாளிகள் படத் தயாரிப்பில் ஈடுபட தொடங்கிய பின் கதாநாயகன் கால்ஷீட்டை உறுதிப்படுத்தவே பைனான்சியர்கள் ஒப்புதல், ஆதரவு தேவைப்பட்டது. நடிகன், அல்லது பைனான்சியர்கள் விரும்பியவர்கள் மட்டுமே படம் தயாரிக்க முடியும் என்கிற சூழல் உருவானபின்பு தரகு முதலாளிகள் அதிகமானார்கள்.

தயாரிக்கப்பட இருக்கும் பட்ஜெட், அப்படத்தின் வியாபாரம், வருவாய்க்கு என்ன வரும் என தெரிந்தும் அத்தொகையை காட்டிலும் அதிகமாக பைனான்சியர்களிடம்கடன் தொகையை வாங்கிவிடுவார்கள். படம் வெளியாகும் காலத்தில் கடன் தொகைக்கும் வருவாய்க்கும் சம்பந்தமில்லாமல் கடனை திருப்பி செலுத்த பற்றாக்குறை ஏற்படும்.

இது சம்பந்தமாக நடக்கும் பஞ்சாயத்தில் பைனான்சியர்கள் தங்களது வட்டி வருவாயை தள்ளுபடி செய்யவேண்டியதும், சில படங்களில் கொடுத்த கடனில் தள்ளுபடி செய்ய வேண்டிய சூழல் கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது இதன் காரணமாக பைனான்ஸ் தொழில் மட்டும் செய்துவந்தவர்கள் காலப்போக்கில் கடன்தொகையை காப்பதற்கு விநியோகஸ்தர்களாக மாறினார்கள்.

கொரோனா தொற்று ஊரடங்குக்கு பின் புதிய பட தயாரிப்புகளுக்கு கடன் கொடுப்பதில்லை என்கிற முடிவுக்கு பெரும்பான்மையான பைனான்சியர்கள் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில்தான் முன்னணி நடிகர்கள் நடித்த படங்களை

விநியோகம் செய்தவர் ரமேஷ் பி.பிள்ளை. மேலும், பல்வேறு படங்களுக்கு பைனான்ஸ் கொடுத்து வந்தவர், அபிஷேக் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி சசி இயக்கத்தில் தயாரித்து வெளியான 'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது எட்டு நேரடி தமிழ் படங்களை தயாரிக்க போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதில் இரண்டு படங்களில் நயன்தாராவும், நான்கு படங்களில் பிரபுதேவாவும் நடிக்க உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழில் இயக்கத்தில் 'ஆயிரம் ஜென்மங்கள்', ’த்ரிஷ்யம்’ படக் கூட்டணியின் 'ராம்' ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றது. இதில் ஆயிரம் ஜென்மங்கள்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

கொரில்லா'படத்தின் இயக்குநர் டான் சேண்டி இயக்கத்தில் பிரபுதேவா, ரெஜினா, அனுசுயா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் 'பிளாஷ்பேக்'. மஞ்சப்பை' ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து வரும் படம் 'மை டியர் பூதம்'. முற்றிலும் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் இணைந்து காணும் வகையில் ஃபேன்டஸி பாணியில் இந்தப் படம் உருவாகிறது.

நயன்தாரா நடிப்பில் இரண்டு படங்கள் உருவாகின்றன. இதில் ஒரு படத்தை ஷாஜி கைலாஸிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த விப்பின் இயக்கவுள்ளார். சைக்காலஜிக்கல் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்கவுள்ளார்.

மற்றொரு படத்தில் நடிக்கும் கலைஞர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது

ராஜா சரவணன் இயக்குநராக அறிமுகமாகும் படம் 'ரவுடி பேபி'. இதில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார். இதில் சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், லட்சுமி ராய் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இசையமைப்பாளராக சாம் சி.எஸ். பணிபுரியவுள்ளார்.

குலேபகாவலி' படத்தின் ஜோடியான கல்யாண் - பிரபுதேவா மீண்டும் இணைந்து பணிபுரியவுள்ளனர். இதில் கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு, தங்கதுரை, டோனி, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் பிரபுதேவா உடன் நடிக்கவுள்ளனர். ஹாரர் கலந்த காமெடிப் படமாக இது உருவாகிறது.

-இராமானுஜம்

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

3 நிமிட வாசிப்பு

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

சனி 10 ஜூலை 2021