மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஜூலை 2021

வலிமை படப்பிடிப்பு தொடங்கியது!

வலிமை படப்பிடிப்பு  தொடங்கியது!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா,இசையமைப்பாளராக யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்தப் படம் பற்றி ஊடகங்களில் வெளியான செய்திகள் வேறு எந்த தமிழ் படங்களுக்கும் எழுதப்பட்டதில்லை, படம் வெளியாகும்வரை இந்த நிலையே தொடரும் என்கின்றனர் கோடம்பாக்க வட்டாரத்தில்

இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டைக்காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது

இந்நிலையில், அப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜூலை 10) ஐதராபாத்தில் தொடங்கி இரண்டு நாட்கள் மட்டும் நடக்கவுள்ளது. அதுவும் பேட்ச் ஒர்க் எனப்படும் இணைப்புக்காட்சிகளை மட்டும் படமாக்குவதற்காகத்தான் இந்த இரண்டுநாட்கள் படப்பிடிப்பு என்று கூறுகின்றனர்

இந்த இரண்டுநாட்கள் படப்பிடிப்பை அப்படியே நீட்டித்து விடுபட்ட சண்டைக்காட்சியையும் படமாக்கும் திட்டமும் இருக்கிறது என்கிறார்கள்.

எப்படியோ ஆண்டுக்கணக்கில் நீண்டுகொண்டிருக்கும் வலிமை படத்தின் மொத்தப்படப்பிடிப்பும் முடிவுக்கு வருகிறது என்பதால் படக்குழுவினர் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்களாம்.

-இராமானுஜம்

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

3 நிமிட வாசிப்பு

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

2 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

சனி 10 ஜூலை 2021