மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஜூலை 2021

ஷாரூக் படத்துக்கு நடுவே அட்லீ தயாரிக்கும் படம்!

ஷாரூக் படத்துக்கு நடுவே அட்லீ தயாரிக்கும் படம்!

கச்சிதமான கமர்ஷியல் பொழுதுபோக்குப் படங்களைத் தரும் இயக்குநர்கள் மிகக் குறைவே. விஸூவலாகவும், திரைமொழியாலும் கவனம் ஈர்த்த இளம் இயக்குநர் அட்லீ. தமிழில் இவர் இயக்கிய நான்கு படங்களுமே பெரிய ஹிட்டாக, பாலிவுட் வரை சென்றுவிட்டார் அட்லீ.

ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் விஜய்க்கு தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களை தொடர்ச்சியாக இயக்கினார். தற்பொழுது, பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஷாரூக் படத்தை இயக்க தயாராகி வருகிறார். ஷாரூக்கின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்க இந்தப் படம் உருவாகிவருகிறது. முதல்கட்டப் பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில், விரைவிலேயே படப்பிடிப்புத் துவங்க இருக்கிறது.

ஷாரூக் படத்துக்காக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மும்பையில் இருக்கிறார் அட்லீ. இந்நிலையில், தமிழில் ஒரு படத்தை தயாரிக்கவும் இருக்கிறாராம். சமீபத்தில் அர்ஜூன் தாஸ் நடிக்க அந்தகாரம் படத்தைத் தயாரித்திருந்தார். இந்தப் படம் பெரியளவில் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், அட்லீ தயாரிக்கும் அடுத்தப் படத்தில் ஜெய் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம்.

ஷாரூக் படத்தை முடித்துவிட்டு தமிழுக்கு வருவதற்கு எப்படியும் ஒரு வருடத்துக்கு மேலாகும். அதுவரை, தமிழில் எதுவும் பண்ணாமல் இருக்க முடியாதென்பதால், இயக்கத்துக்குப் பதில் தயாரிப்பு பணிகளில் கவனம் செலுத்த முடிவெடுத்திருக்கிறார். அதனால், ஜெய் படத்தை தயாரிக்கும் திட்டம்.

தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அட்லீ அறிமுகமான ராஜா ராணி படத்தில் ஜெய் நடித்திருந்தார். அன்றிலிருந்தே இருவருக்குமான நட்பு இன்று வரை தொடர்கிறது. அந்த நட்பினால், ஜெய்க்கு ஒரு படம் தயாரிக்கிறார். அட்லீயிடம் உதவியாளராக இருந்தவர் தான் , படத்தை இயக்க இருக்கிறாராம். விரைவிலேயே படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

ஜெய்க்கு கடைசியாக கேப்மாரி படம் திரையரங்கில் வெளியானது. சொல்லப் போனால், ஜெய்யின் 25வது படம். அதோடு, ஹாட்ஸ்டாரில் இவர் நடித்து ‘ட்ரிப்பிள்ஸ்’ எனும் வெப் சீரிஸ் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. தற்பொழுது, பிரேக்கிங் நியூஸ், எண்ணித்துணிக, வெங்கட்பிரபுவின் பார்ட்டி, சுசீந்திரனுடன் குற்றமே குற்றம் & ஷிவஷிவா, அறம் இயக்குநர் கோபிநயினாரின் படம், சுந்தர் சி இயக்கும் படம் ஆகியவை லைன் அப்பில் இருக்கிறது. இப்படங்களோடு, அட்லீ தயாரிக்கும் படமும் இணைகிறது.

- ஆதினி

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

2 நிமிட வாசிப்பு

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

3 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

சனி 10 ஜூலை 2021