மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஜூலை 2021

ஹைதராபாத்தில் அஜித், கொல்கத்தா செல்லும் ரஜினி: புதிய திட்டங்கள்!

ஹைதராபாத்தில் அஜித், கொல்கத்தா செல்லும் ரஜினி: புதிய திட்டங்கள்!

கொரோனா இரண்டாம் அலை கொஞ்சம் ஓய்ந்திருப்பதால் பெரிய ஹீரோக்களின் படங்களின் படப்பிடிப்பும் கொஞ்சம் கொஞ்சமாகத் தொடங்கி நடந்துவருகிறது. பெரும்பாலான நடிகர்கள் சென்னையிலேயே படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். கதை, லொக்கேஷன் உள்ளிட்ட சில தவிர்க்க முடியாத காரணங்களால், சில நடிகர்களின் படங்கள் பிற மாநிலங்களில் நடந்துவருகின்றன.

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இந்தப் படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடந்தது. இந்த நிலையில், இரண்டாம்கட்ட ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது.

வட இந்திய பகுதிகளில் எடுக்கத் திட்டமிட்டிருந்த காட்சிகளையும் பேட்ச் ஒர்க் செய்து சென்னையிலேயே முடித்துவிடும் திட்டத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில், கொரோனா அச்சத்தையும் தாண்டி படப்பிடிப்புக்காக பிற மாநிலங்களுக்குச் செல்ல தயாராகி வருகிறார்கள் ரஜினி மற்றும் அஜித்.

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு 95 சதவிகிதம் முடிந்துவிட்டது. இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறதாம். வெளிநாட்டில் படப்பிடிப்பு எடுக்க வேண்டுமென லாக்டவுன் முடியட்டும் என்று காத்திருந்தனர். ஆனால், வெளிநாடு ஷூட்டிங் சாத்தியமில்லையென்பதால் ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பை முடித்துவிட இருக்கிறார்கள். விரைவில் தொடங்க இருக்கும் இந்த ஷூட்டிங்கில் அஜித் கலந்து கொள்ள இருக்கிறார். எப்படியும் ஒரு வாரத்துக்கு மேல் அங்கு படப்பிடிப்பு நடக்கும் என்று சொல்லப்படுகிறது. அதோடு, அவுட்டோர் லொக்கேஷன் காட்சியைப் படமாக்க மட்டும் படக்குழுவின் சிலர் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வர இருக்கிறார்கள்.

ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் படம் ‘அண்ணாத்த’. இந்தப் படம் வருகிற நவம்பர் 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. படத்தை முழுமையாக முடிந்து எடிட் போனபிறகு தான், இன்னும் சில காட்சிகள் மீதமிருப்பது தெரியவந்திருக்கிறது. அண்ணாத்த படத்துக்காக இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு எடுக்க வேண்டியிருக்கிறதாம். வருகிற ஜூலை 12ஆம் தேதி சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்குகிறார்கள். அதன்பிறகு, சில நாட்கள் கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடத்தவும் திட்டமாம். இந்தப் படத்தின் கதையில் கொல்கத்தாவில் நடக்கும் சில காட்சிகள் வருகிறதாம். அதனால், கொல்கத்தாவின் அவுட் டோர் ஷூட்டிங்கிற்காகச் செல்ல இருக்கிறார்கள். கொல்கத்தா ஷெட்யூலின் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ரஜினி கலந்துகொள்ள இருக்கிறார். மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் ரஜினி, ஓரிரு தினங்களில் இந்தியா திரும்ப இருக்கிறார். சென்னை திரும்பியதும் கொல்கத்தா சென்று படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

-தீரன்

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

3 நிமிட வாசிப்பு

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

வெள்ளி 9 ஜூலை 2021