மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஜூலை 2021

செல்வராகவன் படத்திலிருந்து யுவன் விலகல்?

செல்வராகவன் படத்திலிருந்து யுவன் விலகல்?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவரின் இயக்கத்தில் சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளியான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ பெரியளவில் வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக, தனுஷ் நடிக்க ‘நானே வருவேன்’ படத்தினை இயக்க தயாராகிவருகிறார். இயக்குநராக பிரமிக்க வைத்தவர் நடிகராக அறிமுகமாக இருக்கும் படம் ‘சாணிக் காயிதம்’.

இந்தப் படத்தினை அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்கி வருகிறார். இவர் இயக்கத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா நடித்திருக்கும் ‘ராக்கி’ ரிலீஸூக்கு ரெடியாகிவருகிறது. இது, அருண் மாதேஸ்வரனின் இரண்டாவது படம். இப்படத்தை மாஸ்டர் பட இணைத் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்து வருகிறார்.

சியான் 60, கோப்ரா, காத்துவாக்குல ரெண்டு காதல் என பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரித்துவரும் இந்நிறுவனம் சின்ன பட்ஜெட்டில் ‘சாணிக் காயிதம்’ படத்தை உருவாக்கிவருகிறது.

இப்படத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் இருவரும் லீட் ரோலில் நடித்துவருகிறார்கள். இருவருமே திருடர்களாக படத்தில் வருகிறார்களாம். இரண்டு திருடர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட களமாக படம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் இசையமைப்பாளராக முதலில் உறுதியானவர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.

பெரும்பாலான செல்வராகவன் படங்களில் யுவன் ஷங்கர்ராஜா இருப்பார். யுவன் - செல்வா காம்போ ரசிகர்கள் மத்தியில் பெரிய மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. அடுத்ததாக, தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ படத்துக்கும் யுவன் தான் இசை. தற்பொழுது, செல்வராகவன் நடிக்கும் படத்துக்குப் பின்னணி இசைக்க இருக்கிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்திலிருந்து யுவன் விலகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் இசையமைக்க பெரும் தொகையை சம்பளமாகக் கேட்டிருக்கிறார் யுவன். செல்வராகவன் இயக்கும் படங்களுக்கு என்ன சம்பளம் பேசுவாரோ, அதே சம்பளத்தை இதற்கும் கேட்டிருக்கிறார்.

படத்தை சின்ன பட்ஜெட்டில் எடுத்து வருகிறது செவன் ஸ்க்ரீன் நிறுவனம். அதனால், பட்ஜெட்டுக்குள் அவர் கேட்ட சம்பளம் வரவில்லை. அதோடு, சம்பளத்தைக் குறைக்கவும் யுவன் தயாராக இல்லை. இதனால், யுவனுக்குப் பதில் சாம்.சிஎஸ். இசையமைக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்.

யுவன் இல்லாத செல்வா படமென்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தைத் தரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதோடு, யுவனுடன் ஒப்பிடும்போது சாம் சி.எஸ்.இசையை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா, படத்தின் வியாபாரத்தில் பாதிப்பு ஏற்படுத்துமா என்பதும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

- தீரன்

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

2 நிமிட வாசிப்பு

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

4 நிமிட வாசிப்பு

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

பிக்பாஸ் ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

5 நிமிட வாசிப்பு

பிக்பாஸ்  ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

வெள்ளி 9 ஜூலை 2021