மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஜூலை 2021

சிம்பு, அருண்விஜய்...?: மிஷ்கினின் அடுத்த ஹீரோ !

சிம்பு, அருண்விஜய்...?: மிஷ்கினின் அடுத்த ஹீரோ !

மிஷ்கின் இயக்கத்தில் கடைசியாக திரைக்கு வந்தப் படம் ‘சைக்கோ’. பார்வை சவால் கொண்ட கதாபாத்திரத்தில் உதயநிதி நடித்திருந்தார். இளையராஜா இசையில் பாடல்களும், மிஷ்கினின் இயக்கத்தில் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்துக்குப் பிறகு, மிஷ்கின் இயக்கிவந்த படம் ‘துப்பறிவாளன் 2’. ஆனால், நாயகன் விஷாலுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டினால் படத்திலிருந்து வெளியேறினார். துப்பறிவாளன் 2 படத்தை இயக்கும் பொறுப்பினை விஷால் மேற்கொண்டுவருகிறார்.

கசப்பான துப்பறிவாளன் சம்பவத்துக்குப் பிறகு, உடனடியாக மிஷ்கின் பிசாசு 2 படத்தைத் துவங்கினார். ஆண்ட்ரியா லீட் ரோலில் நடித்துவரும் இப்படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைத்துவருகிறார். படத்துக்கான பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

பிசாசு 2 படத்துக்காக பெரும் சம்பளம் ஆண்ட்ரியாவுக்கு பேசப்பட்டிருக்கிறது. அதோடு, நிர்வாணமாக சில காட்சிகளில் நடிக்கவும் இருக்கிறாராம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடந்துமுடிய இருக்கிறது.

பிசாசு 2 படத்தினை முடித்துவிட்டு, இரண்டு படங்களை அடுத்தடுத்து துவங்க திட்டமிட்டிருந்தார் மிஷ்கின். அருண்விஜய் நடிப்பில் ஒரு படமும், சிம்பு நடிக்க ஒரு படமும் துவங்க திட்டமிட்டிருந்தார். ஆனால், ஹரி இயக்கத்தில் நடித்துவரும் அருண்விஜய், மீண்டும் அறிவழகன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அதுபோல, மாநாடு முடிக்க இருக்கும் சிம்பு, அடுத்தடுத்து கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல, கெளதம் மேனனுடன் ‘நதிகளில் நீராடும் சூரியன்’ படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதனால், அருண்விஜய்யும், சிம்புவும் செம பிஸி.

உடனடியாக, ஒரு புதிய படத்தை எடுத்து முடிக்க முடிவெடுத்திருக்கிறார் மிஷ்கின். அதன்படி, மிஷ்கின் அடுத்தப் பட ஹீரோவாகியிருக்கிறார் அதர்வா. முரட்டுத்தனமான ஒரு லுக்கில் இந்தப் படத்தில் நடிக்க இருக்காராம். பிசாசு 2 முடிந்த கையோடு, மிஷ்கின் - அதர்வா படம் துவங்க இருக்கிறது.

கொரோனா அச்சுறுத்தலால் அதர்வா நடித்திருக்கும் பல படங்கள் ரிலீஸாக முடியாமல் கிடப்பில் கிடக்கிறது. இருப்பினும் தொடர்ச்சியாக நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் தள்ளிப் போகாதே, குருதியாட்டம், ஒத்தைக்கு ஒத்த, அட்ரெஸ் படங்களில் லைன் அப்பில் இருக்கிறது. அதோடு, மணிரத்னத்தின் நவரசா ஆந்தாலஜியிலும் ஒரு கதையில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-ஆதினி

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வெள்ளி 9 ஜூலை 2021