மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஜூலை 2021

பூஜா ஹெக்டேயுடன் நடிக்க விரும்பும் தனுஷ்

பூஜா ஹெக்டேயுடன் நடிக்க விரும்பும் தனுஷ்

தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக தற்போது முன்னணியில் உள்ள நடிகை பூஜா ஹெக்டே. ஒரு படத்திற்கு சுமார் 4 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்பதாகத் தகவல். கதாநாயகன், தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் இவர்களைப் பொறுத்து சம்பள கணக்கு மாறுபடுமாம்.

தமிழில் விஜய் ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் தற்போது நடித்து வருகிறார். அடுத்து மகேஷ் பாபு ஜோடியாக ஒரு படம், பவன் கல்யாண் ஜோடியாக ஒரு படம் என தெலுங்கில் இரண்டு படங்களில் நடிக்க உள்ளார். அவற்றோடு தனுஷ் நடிக்க உள்ள புதிய படத்திலும் ஜோடியாக நடிக்கப் போகிறார் என்று தெலுங்கு சினிமா வட்டாரத்தில் செய்தி கசிய தொடங்கியிருக்கிறது. தெலுங்கில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படத்திற்காகத்தான் பூஜாவிடம் பேசப்பட்டுள்ளதாம்.

இதற்கு முன்பு 'மாஸ்டர்' படத்தில் நடித்த மாளவிகா மோகனனை தனுஷ் 43வது படத்திற்காக ஜோடியாக்கினார் தனுஷ். அடுத்து 'பீஸ்ட்' பட நாயகி பூஜா ஹெக்டேவை தனது புதிய படத்திற்காக ஜோடியாக்க உள்ளார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் இருவரும் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது இவர்களுடன் கதாநாயகிகளாக நடித்தவர்களுடன் ஜோடி சேர அன்றைய காலகட்டத்தில் கதாநாயகர்களாக இருந்த ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், அசோகன் போன்ற நடிகர்கள் விரும்புவார்களாம்.

இதற்காக தங்களது சம்பளத்தில் சமரசம் செய்துகொள்வது உண்டு அதே போன்ற சூழல் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உச்சத்தில் இருந்தபோதும் நடைபெற்றது இப்போது அஜீத்குமார்-விஜய் இவர்களுடன் நடிக்கும் நடிகைகளுடன் ஜோடியாக நடிப்பதன் மூலம் தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் நடிகர்களின் மனோநிலையால் நடிகைகளின் சம்பளம் இரு மடங்காக உயர்கிறது என்கின்றனர் தயாரிப்பு நிர்வாகிகள் வட்டாரத்தில்.

-இராமானுஜம்

புதிய ஐபிஎல் அணிகள்: சர்ச்சைப் பின்னணி!

7 நிமிட வாசிப்பு

புதிய ஐபிஎல் அணிகள்:  சர்ச்சைப் பின்னணி!

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

3 நிமிட வாசிப்பு

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்! ...

3 நிமிட வாசிப்பு

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்!

வெள்ளி 9 ஜூலை 2021