மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஜூலை 2021

கோவா 52ஆவது சர்வதேச திரைப்பட விழா!

கோவா 52ஆவது சர்வதேச திரைப்பட விழா!

இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழா, சுற்றுலா தலமான கோவாவில் நடைபெறுவது வழக்கம். ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி இந்தத் திரைப்பட விழா முடிவடையும்.

ஆனால், உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடக்க வேண்டிய விழா, இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில்தான் நடத்த முடிந்தது. இந்த ஆண்டுக்கான 52ஆவது சர்வதேச திரைப்பட விழா வருகிற நவம்பர் மாதம் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை வழக்கம் போன்று நடைபெறும் என்று மத்திய அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் போட்டி பிரிவில் கலந்து கொள்ள விரும்பும் படங்கள் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

52ஆவது சர்வதேச திரைப்பட விழாவுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். இந்த விழாவில் பிரபல இயக்குநர் சத்யஜித் ரேக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் இருந்து சுமார் 180 நாடுகளில் இருந்து 250 படங்கள் வரை இந்த விழாவில் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- இராமானுஜம்

புதிய ஐபிஎல் அணிகள்: சர்ச்சைப் பின்னணி!

7 நிமிட வாசிப்பு

புதிய ஐபிஎல் அணிகள்:  சர்ச்சைப் பின்னணி!

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

3 நிமிட வாசிப்பு

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்! ...

3 நிமிட வாசிப்பு

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்!

வியாழன் 8 ஜூலை 2021