மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஜூலை 2021

'கேஜிஎஃப்' உடன் போட்டிப்போட தயாராகும் 'புஷ்பா'!

'கேஜிஎஃப்' உடன் போட்டிப்போட தயாராகும் 'புஷ்பா'!

2018இல் வெளிவந்த கன்னடப் படமான 'கேஜிஎஃப்' தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வந்தன. இந்தப் படத்தை முதலில் ஜூலை 16ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், கொரோனா இரண்டாவது அலை காரணமாக முடியவில்லை.

முதல் பாகம் வெளியானதைப் போலவே கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்கள் சென்டிமென்ட்டாக முதல் பாகத்தை பெரிய அளவில் வெற்றிபெற வைத்ததுபோல இரண்டாம் பாகத்தையும் வெற்றிபெற வைக்கும் என்று படக்குழு கருதுகிறதாம்.

அதே போன்று தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா' படத்தின் முதல்பாகத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கன்னட மொழியில் கேஜிஎஃப், தெலுங்கு மொழியில் புஷ்பா என இரண்டு படங்களும் தத்தம் தாய்மொழியில் தயாராகி இருந்தாலும் தமிழ், இந்தி, ஆங்கிலம் என மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிட்டால் மட்டுமே இந்தப் படங்களின் பட்ஜெட் தொகையை வருவாயாகப் பெற முடியும்

தற்போது இந்தியா முழுவதும் ஒரே காலத்தில் திரையரங்குகளைத் திறக்கும் வாய்ப்பு இல்லை என்பதுடன் அச்சம் களைந்து குடும்பங்கள் தியேட்டருக்கு வருவதற்கு சில மாதங்கள் ஆகும். அதைக் கணக்கில்கொண்டே இரண்டு படங்களும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் விடுமுறையைக் குறிவைத்து வெளியீட்டு தேதியைத் தீர்மானிக்கின்றனர்.

-இராமானுஜம்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

வியாழன் 8 ஜூலை 2021